"அஞ்செலா டேவிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''அஞ்செலா இவான் டேவிசு''' ( ''Angela Yvonne Davis'', சனவரி 26, 1944) [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். 1960களில் [[ஐக்கிய அமெரிக்கப் பொதுவுடமைக் கட்சி]]த் தலைவராக அக்காலத்திய [[எதிர்ப்பண்பாடு]] இயக்கங்களில் முன்னணி வகித்தார். [[கருஞ்சிறுத்தைக் கட்சி]]யின் அலுவல்முறையான உறுப்பினராக இல்லாதபோதும், [[குடிசார் உரிமைகள் இயக்கம்|குடிசார் உரிமைகள் இயக்கங்களில்]] பங்கேற்றமையால் அக் கட்சியுடன்அக்கட்சியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். சிறைக் குற்றவாளிகளின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபட்டார்; இதற்காக ''கிரிட்டிகல் ரெசிஸ்டன்சு'' என்ற அமைப்பை நிறுவினார். இது சிறை-[[தொழிற்சாலை]] முறையை எதிர்த்தது.
 
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டா குரூசு வளாகத்தில் உணர்வியல் வரலாற்றுத் துறையில் பேராசிரியையாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அதே பல்கலைக்கழகத்தின் [[பெண்ணியம்|பெண்ணியக் கல்வி]] துறைக்கு முன்னாள் இயக்குநராகவும் இருந்துள்ளார்.<ref name="BookTV">{{cite episode|title=Interview with Angela Davis|series=BookTV|airdate=October 3, 2004}}</ref>
 
இவருக்கு [[பெண்ணியம்]], ஆபிரிக்க-அமெரிக்கர்கள், [[மார்க்சியம்]], பரப்பிசை, சமூக உணர்வியல், தண்டனை மற்றும் சிறைச்சாலைகள் குறித்த [[மெய்யியல்]] ஆகியவற்றில் ஆய்வுக்கான விருப்பம் இருந்தது. பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தமையால் 1969இல் [[கலிபோர்னியா]] மாநிலத்தின் பல்கலைக்கழகங்களில் இவர் பணியாற்றுவதற்குத் தடை விதிக்க [[ரானல்ட் ரேகன்]] கோரினார். 1980களில் இரண்டு முறை ஐக்கிய அமெரிக்க பொதுவுடமைக் கட்சியின் சார்பில் அமெரிக்கத் துணைக் [[குடியரசுத் தலைவர்]] பதவிக்குப் போட்டியிட்டார்.
 
==மேற்சான்றுகள்==
1,003

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1766554" இருந்து மீள்விக்கப்பட்டது