முதலாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
}}
 
'''முதலாம் பராக்கிரமபாகு''' ([[சிங்களம்]]: මහා පරාක්‍රමබාහු) அல்லது '''மகா பராக்கிரமபாகு''' <ref>Paranavitana, ''History of Ceylon'', p. 199</ref><ref>''Encyclopædia Britannica'', [http://www.britannica.com/eb/article-9058393/Parakramabahu-I#161133.hook Parakramabahu I]</ref> [[பொலன்னறுவை|பொலன்னறுவை]] யுக மன்னனாவான். பொலன்னறுவை இராச்சியத்தை 1153 - 1186 வரை ஆண்டு வந்தான். அரசர் மானாபரணவிற்க்கும்மானாபரணவுக்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் [[கேகாலை]]ப் பகுதியில் ''புங்ககம'' எனும் கிராமத்தில் பிறந்தான். இலங்கையின் முக்கிய மூன்று இராச்சியங்களையும் பராக்கிரமபாகு ஒன்றிணைத்துள்ளான். அக்காலத்திலே தலைநகரமாக விளங்கியது [[பொலன்னறுவை]] ஆகும். தன்னுடைய தலைநகரை அழகாகப் பேணல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தான். இவனின் காலத்தில் நாட்டில் விரிவாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசன தொகுதிகள் காணப்பட்டன, நாட்டின் இராணுவப் படைகள் மறுசீரமைக்கப்பட்டன, பௌத்த மதம் வளர்க்கப்பட்டது, கலைகளும் வளர்க்கப்பட்டன. [[தென்னிந்தியா|தென்னிந்தியாவுடனும்]], [[மியான்மார்|மியான்மாருடனும்]] பராக்கிரமபாகு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான். இவனின் காலத்தில் [[இலங்கை]] [[தெற்காசியா]]வின் தானியக் [[களஞ்சியம்]] என அழைக்கப்பட்டது.{{cn}} இவனே பராக்கிரம [[சமுத்திரம்|சமுத்திர]]த்தையும் கட்டுவித்தான். "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திர்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்" என்பது பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். <ref>Culavamsa, LXVIII, 8</ref>
 
பராக்கிரமபாகு தனது இளம் வயதை தனது மாமன்மாரான [[கீர்த்தி சிறீ மேகன்]], ஸ்ரீ வல்லப போன்றோரின் அரண்மனைகளில் கழித்தான். இவர்கள் முறையே தக்கிண தேசம் மற்றும் [[உருகுணை இராச்சியம்|உருகுணை இராச்சியத்தின்]] மன்னர்கள். அத்துடன் [[இராசரட்டை|இராசரட்டையின்]] [[இரண்டாம் கஜபாகு]]வுடனும் இளமையில் நட்புறவு வைத்துள்ளான். [[சீனா]] மற்றும் [[மத்திய கிழக்கு]] நாடுகளுடனும் இம்மன்னன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தான். <ref>''Kenneth Hall'', "Economic History of Early South Asia", in Nicholas Tarling (ed), The Cambridge History of South East Asia, Vol. I, Cambridge 1994</ref> இவன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மதம், விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு தரப்பட்ட துறைகளிலும் தனது சேவைகளை மேற்கொண்டுள்ளான்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பராக்கிரமபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது