இப்போக்கிரட்டீசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
 
தொன்மைக் கால கிரேக்கத்தில் மூலை முடுக்கெல்லாம் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்தினார்.
நோய்களின் மூலக் காரணங்களை அறிய முற்பட்ட முதல் மருத்துவர் இவரே. எளிமையான மிகச் சில மருந்துகளையே தமது சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினார். உணவு, தூய காற்று உடல் பயிற்சி ஆகியனவே போதுமானது, இதுவே இயற்கை மருத்துவம் என்று கூறினார். ஹிப்போகிரேட்ஸ்ஹிப்போக்கிரட்டீஸ் வெறும் மருத்துவர் மட்டும் அல்லாமல் அறுவை சிகிச்சையிலும் தேர்ந்தவராக இருந்தார்.
எலும்பு முறிவு மூட்டு நழுவல் போன்றவற்றிற்கு அறுவை மருத்துவம் செய்தார். அறுவை சிகிச்சை செய்யும்போது அதைச் செய்பவருடைய கை விரல்களின் நகங்கள் மிக நீளமாகவும் இருக்கக் கூடாது. மிகவும் குட்டையாகவும் இருத்தல் கூடாது.
திருத்தமாகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் தூய்மையாகவும் சிகிச்சையை முடிக்கவேண்டும். இத்தகைய அறிவுரைகள் ஹிப்போக்கி ரட்டீசின் கட்டளைகள் என்று மருத்துவ உலகில் வழங்கப் படுகிறது.
 
எகிப்தில் உள்ள அலேக்சாந்திரியாவில் மருத்துவக் கலையின் செய்திகள் முறைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சில
ஹிப்போக்கிரட்டிசின்ஹிப்போக்கிரட்டீசின் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பு நூலகளில் புனித நோய்கள் என்னும் ஒரு நூல் பெயர் பெற்ற ஒன்று ஆகும் அந்நூலில் காக்காய் வலிப்பு என்னும் நோய் பற்றிய குறிப்புகள் உள்ளன.காக்காய் வலிப்பு என்பது சினம் கொண்ட கடவுளால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என அந்தக் காலத்தில் நம்பப்பட்டது. எனவே அது புனித நோய் என்று கருதப்பட்டது. பிளேக் நோய் ஊரில் பரவியபோது மக்கள் உடுத்தும் ஆடைகளை எரித்து விடவேண்டும் என்றும் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிரேக்க நாட்டின் முக்கிய பகுதிகளுக்குப் பயணம் செய்து மருத்துவத்தின் மகத்துவத்தைச் சொன்னார்.
இறுதியாக லாரிசா என்னும் ஊரில் காலமானார் என்று கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இப்போக்கிரட்டீசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது