வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 83:
வெள்ளி [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] ஒவ்வொரு 224.7 [[புவி]] நாட்களில் சுற்றி வருகின்றது.<ref name="nasa_venus" /> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 June 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
 
வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிசகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான [[வளிமண்டலம்]] உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய [[காபனீரொக்சைட்டு]] அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் [[வளிமண்டல அழுத்தம்]] புவியை விட 92 மடங்காக உள்ளது. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை {{convert|735|K|°C °F|abbr=on}}ஆக உள்ளது. இங்கு [[கார்பன் சுழற்சி]] நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் [[உயிர்த்திரள்|உயிர்த்திரளில்]] கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் [[சல்பூரிக் அமிலம்|சல்பூரிக் அமில]] மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை [[ஒளி]] மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;<ref>{{cite journal
|author=Hashimoto, G. L.; Roos-Serote, M.; Sugita, S.; Gilmore, M. S.; Kamp, L. W.; Carlson, R. W.; Baines, K. H.
|title=Felsic highland crust on Venus suggested by Galileo Near-Infrared Mapping Spectrometer data
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது