சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
 
==முதல் அத்தியாயம்==
[[ஓம்|ஓங்காரத்தின்]] மகிமையை அறிந்து, சிரத்தையுடனும் யோகமுறைப்படியும் செய்யப்படும் உபாசனையே வீரியமுடையதாகும். சூரியனிடம் போற்றப்படும் தெய்வம் எதுவோ அதுவே கண்ணில் ஒளியாயிருப்பது. இதுதான் அக்ஷி வித்தை. (அக்ஷி = கண்). இவ்வுலகிற்குப்புகலிடம் 'ஆகாசம்' (=வெளி). 'ஆகாசம்' என்ற வடமொழிச்சொல்லிற்கு <ref> ''ஆ'' = எங்கும்; ''காசம்'' = பிரகாசிப்பது </ref> 'எங்கும் விளங்கும் பொருள்' என்று தமிழில் சொல்லலாம். இதனால் 'ஆகாசம்' என்ற தத்துவத்தை 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்' விளங்கும் பரம்பொருள் என்றே அறிந்து கொள்ளலாம். இவ்விதம் அறிந்து கொள்வதைத்தான் 'ஆகாச வித்தை' என்பர்.
 
இதற்குப்பிறகு அத்தியாயத்தின் முடிவில் உஷஸ்தி என்பவருடைய கதை வருகிறது. இவர் கிராமம் ஒன்றில் சென்றுகொண்டிருந்தபோது, வேறு வழியில்லாமல் கொள்ளைத் தின்றுகொண்டிருந்த யானைக்காரன் ஒருவனிடம் பிச்சை கேட்டார். அவன் தான் தின்றுகொண்டிருந்த கொள்ளையே இவருக்குக் கொடுத்தான். கூடவே தண்ணீரும் கொடுத்தான். கொள்ளை ஏற்றுக்கொண்ட உஷஸ்தி தண்ணீரை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஏனென்றால் அது ஒருவர் சாப்பிட்டமீதம் என்றார். அப்படியென்றால் கொள்ளை மாத்திரம் எப்படி ஏற்றுக்கொண்டீர் என்று கேட்டதற்கு 'அதை உண்ணாவிடில் என் உயிர் நிலைத்திருக்காது; குடி நீரோவெனின் காமமாகும்' என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும்போது தன் ஆசாரத்தை மீறுவது தவறாகாது என்பது இதனால் தெரியப்படுத்தப்படுகிறது.
வரிசை 59:
==மூன்றாவது அத்தியாயம்==
 
இவ்வத்தியாயத்தில் மது வித்தை, [[காயத்ரி மந்திரம்|காயத்ரீ மந்திரத்தின்]] மஹிமை, சாண்டில்ய வித்தை, [[இரண்யகர்பன்|இரண்யகர்ப தியானம்]] மனித வாழ்க்கையே ஒரு [[யக்ஞம்]] என்ற பார்வை, முதலியன அடங்கும்.
 
மது என்றால் தேன். தேன் எப்படி களியூட்டுகிறதோ அப்படி சூரியன் எல்லா புலன்களுக்கும், புலன்களின் அதிதேவதைகளான தேவர்களுக்கும் களியூட்டுகிறான். தேவர்கள் இந்த சூரியனாகிற அமிர்தத்தைப் பார்த்தே திருப்தியடைந்துவிடுகின்றனர். இவ்வித்தையை பிரம்மா பிரஜாபதிக்கும், பிரஜாபதி மனுவுக்கும் மனு மற்ற மக்களுக்கும் உபதேசித்தார். இவ்விதம் பரம்பரையாக வந்த பிரம்மஞானத்தை உத்தாலக ஆருணிக்கு அவருடைய தந்தை உபதேசித்தார்.(3-1 இலிருந்து 3-11 வரை).
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது