இசுடீபன் எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
info-box உருவாக்கப்பட்டுள்ளது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
 
'''இசுடீபன் டபுள்யூ. ஹெல்''' (''Stefan W. Hell'', 23 திசம்பர் 1962) [[உருமேனியா]]வின் அராத் பகுதியில் பிறந்த [[செருமனி|செருமானிய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]] ஆவார். [[செருமனி]]யின் கோட்டிஞ்செனில் உள்ள ''மாக்சு பிளாங்க் உயிரி இயற்பியல் வேதியியல் கழகத்தின்'' இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.<ref>[http://www.mpibpc.mpg.de/english/start/index.php Max Planck Institute for Biophysical Chemistry]</ref> "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக" 2014ஆம் ஆண்டுக்கான [[வேதியியலுக்கான நோபல் பரிசு]] இவருக்கு [[எரிக் பெட்சிக்]], [[வில்லியம்.ஈ. மோர்னர்|வில்லியம் மோர்னருடன்]] பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.<ref>http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2014/press.pdf</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
உருமேனியாவின் அராட் நகரில் பிறந்தவர். அதே ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் 1990-ல் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அவரது தந்தை ஒரு பொறியியலாளர்.<br>
 
=== நோபல் பரிசு ===
உயர் தொழில்நுட்ப ப்ளோரசன்ட் மைக்ரோஸ்கோப்பை (Super Resolution Microscope) மேம்படுத்திய இவருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு எரிக் பெட்சிக், வில்லியம் மோர்னர் ஆகியோருடன் கடந்த 10-ம் தேதி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
 
=== குறிப்பிடத்தக்க பணிகள் ===
1991 முதல் 1993 வரை ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் சோதனைக் கூடத்தில் பணிபுரிந்தார். அங்கு 4-Pi மைக்ரோஸ்கோப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். அடுத்த 3 ஆண்டுகள் பின்லாந்து பல்கலைக்கழகத்தில் மருத்துவ இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். தூண்டப்பட்ட வெளியேற்ற சிதைவு (STED Microscopy) கோட்பாட்டை மேம்படுத்தினார்.
 
ஆப்டிகல் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதுபடுத்திப் பார்க்கப்படும் பொருட்களில் தெளிவு இல்லாத நிலை இருந்தது. ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன், ஒளி நுண்ணோக்கி தொழில்நுட்பத்தில் நானோ பரிமாணத்தை எட்ட முடியும் என்று நிரூபித்துள்ளனர்.
 
2002-ம் ஆண்டில் இருந்து ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் உயிரி வேதியியல் நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நானோ பயோ ஃபோட்டோனிக்ஸ் துறையை இங்கு நிறுவியுள்ளார். ‘ஸ்டெட்’ நுண்ணோக்கியியல் வளர்ச்சியிலும் பிற மைக்ரோஸ்கோப்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 200 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
 
=== ஆட்டோ ஹான் பரிசு ===
2000 ஆம் ஆண்டில் ஒளியியல் சர்வதேச ஆணைக்குழு இவருக்கு ‘ஆட்டோ ஹான்’ பரிசை வழங்கியது. கார்பர் ஐரோப்பிய அறிவியல் விருது உட்பட 30 விருதுகள், ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார். ஜெர்மனியின் புற்றுநோய் ஆய்வு மைய ஆப்டிகல் நானோஸ்கோபி துறைத் தலைவராகவும், ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.
 
=== பங்களிப்பு ===
இவரது பங்களிப்புடன் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மைக்ரோஸ்கோப் மூலம் செல் பிரிவதை மிக நுண்ணிய நானோ அளவில் காண முடியும். ப்ளோரசன்ட் மூலக்கூறுகள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரையறைக்கு உட்பட்டதாக இருந்த மைக்ரோஸ்கோப் மேலும் நுண்ணிய மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் நானோஸ்கோப்பாக வளர்ச்சியடைந்துள்ளது. அல்ஸீமர், பார்கின்சன் போன்ற நோய்களுக்கு மூலகாரணமான புரோட்டீன்களை இந்த மைக்ரோஸ்கோப் மூலம் அடையாளம் காணமுடியும். மருந்தில்லா நோய்களை முற்றிலும் தடுப்பதற்கான பல ஆய்வுகளுக்கு இந்த நானோஸ்கோப் வித்திட்டுள்ளது. <ref>{{cite web | title = ஸ்டெபான் ஹெல் 10 | url = http://tamil.thehindu.com/opinion/blogs/ஸ்டெபான்-ஹெல்-10/article6718996.ece
| date = 23 டிசம்பர் 2014| accessdate = 23 டிசம்பர் 2014}}</ref>
 
== மேற்சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுடீபன்_எல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது