"சோ. ராமேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,876 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது சொந்த ஊர் [[புலோலி|மேலைப்புலோலியூர்]], [[பருத்தித்துறை]], [[ஆத்தியடி]] ஆக இருந்தாலும் இவர் பிறந்தது அநுராதபுரத்தில்.
 
==கல்வி==
இவர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும், இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் (1995-1997) கல்வி கற்றார். 1958ஆம்[[1958]] ஆம் ஆண்டு ஜூன் கலவரத்தின் பின் ஒன்றரை வருடங்கள் பருத்தித்துறையில் கற்றார்.
 
==கலையுலகில்==
இவர் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். நிறையவே எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், நகைச்சுவைக் கதை, நாடகம், சிறுவர் இலக்கியம் என சகல துறைகளிலும் தன் திறமையை நிரூபித்தவர். இவர் தனது 15 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டார். இவர் எழுதிய நகைச்சுவைத் துணுக்குகள் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்த 'கண்ணன்' என்ற சிறுவர் சஞ்சிகையில் வெளியாகின. இவருக்கு தனது படைப்புக்கள் பிரசுரமாவதில் பெரும் ஆர்வம் இருந்தது. அதனால் 'கண்ணன்' இதழுக்கேற்ற கதைகளை எழுதி அனுப்பினார். அக்கதைகள் பிரசுரமாகவில்லை. ஆனாலும் மனம் தளராமல் எழுதுவதைத் தொடர்ந்தார். நகைச்சுவைத் துணுக்குகளை 'சிந்தாமணி' பத்திரிகைக்கு எழுதியனுப்பினார். அவை வெளியாகின. அவற்றில் ஒன்று பரிசுக்கும் தெரிவாகியிருந்தது. அடுத்து அவரது கவனம் சிறுகதைத் துறைக்குத் திரும்பியது. முதலில் சிறுகதையொன்றை எழுதி அதை 'வீரகேசரி வார வெளியீட்டின்' ஆசிரியராகத் திகழ்ந்த அமரர் பொன். இராஜகோபாலிடம் கையளித்தார். அவரது சிறுகதையின் பாணி பொன். இராஜகோபாலுக்குப் பிடிக்காததால் அக்கதையை மூன்று முறையாக திருப்பி, திருத்தி எழுத வைத்தார். மூன்றாவது முறை எழுதியதும் பிரசுமாகவில்லை. மனம் சலித்த ராமேஸ்வரன் அக்கதையை 'சிந்தாமணிக்கு' அனுப்பினார். அச் சிறுகதை 1969, டிசம்பர் 19ஆம் திகதி சிந்தாமணியில் பிரசுரமானது. 'அப்பா வரமாட்டார்' என்ற அச்சிறுகதையே இவரது முதற் சிறுகதை. இவை தவிர தொலைக்காட்சி நாடகங்களின் தயாரிப்பிலும் இவர் பங்காற்றியுள்ளார். இவரது முதலாவது நாவல் [[யோகராணி கொழும்புக்கு போகிறாள்]] [[1992]] இல் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை 44 நூல்கள் தமிழ், ஆங்கிலம், மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்நூல்களின் பட்டியலில் ஏழு சிங்கள நூல்களும், இரு ஆங்கில நூல்களும் அடங்குகின்றன. மேலும் கண்நோய் பற்றி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இரு நூல்களை வெளியிட்டுள்ளார்.
 
மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினால் 1996இல் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் ராமேஸ்வரன் எழுதிய "வடக்கும், தெற்கும்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றதுடன், இதே நாவல் அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்தையும், மொழி வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு அகில இலங்கைரீதியில் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது. அத்துடன் இவர் எழுதிய "திசை மாறிய பாதைகள்" என்ற சிறுவர் நவீனம் [[1998]] இலும், 'வாழ நினைத்தால் வாழலாம்" என்ற சிறுவர் நவீனம் [[2005]] இலும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய போட்டியில் முதற் பரிசுகளைப் பெற்றன. தமிழ் இலக்கிய உலகுக்கு இவர் நல்கிய பங்களிப்பினைக் கௌரவப்படுத்துமுகமாக [[15 டிசம்பர்]], [[2012]] இல் இவருக்கு 'கலாபூஷணம்' என்ற பட்டத்தை இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. இது தொடர்பான விழா கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்ற போது அவருக்கு விருதும், சான்றுப்பத்திரமும் வழங்கப்பட்டன. 1998இல் அமைச்சுக்கிடையிலான அரச உத்தியோகத்தர்களின் ஆக்கப் படைப்புக்களில் இவர் எழுதிய "நியாயம், தர்மம்....." என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.
3,533

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1772297" இருந்து மீள்விக்கப்பட்டது