அமைதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Gari-Melchers-Peace-Highsmith.jpeg|thumb|450px|[[Gari Melchers]], Mural of Peace, 1896.]]
'''அமைதி''' என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு [[எதிர்ச் சொல்]]லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் ''அமைதி'' என்பது, [[பகைமை]] இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது [[போர்]] இல்லாத நிலையையும் குறிக்கும். ''குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை'' எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதருடனான தொடர்புகளும் [[மதிப்பு]], [[நீதி]], [[நல்லெண்ணம்]] என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் [[பாதுகாப்பின்மை]], [சமூகநீதியின்மை]], [[பொருளியல் ஏற்றத்தாழ்வு]] என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஒரு இலட்சிய நிலை எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/அமைதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது