மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
மலையாள மொழியைக் குறித்து முதல் முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் அவர்கள். இவரைப் பொறுத்த வரையில் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். புருஷபேத நிராசம், சமஸ்கிருத பாஹுல்யம் முதலியவற்றால் தமிழிலிருந்து மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்தது தமிழே. தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என் இரண்டு வகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலைநாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமஸ்கிருதத்தின் தாக்கத்தினால் தனி மொழியாக ஆனது என்பது ராஜராஜவர்ம்மாவின் கருத்தாகும்.
[[படிமம்:Malpublicinfoboard.JPG|thumb|மலையாளத்தில் பொது அறிவித்தல் பலகை]]
ஆனால் வி.கே.பரமேசுவரன் அவர்களின் கருத்துப்படி தமிழும் மலையாளமும் தனித்த மொழிகளாகும். கேரளத்தில் ஏற்பட்ட சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கத்தால் மலையாளம் தமிழால் மிகவும் அதிகமாகஅதிகமாகப் பாதிக்கப்பட்டது. அரசசாசனஙக்ளிலும்அரசு சாசனங்களிலும், ஆட்சிமொழியாகவும், உயர்குடி மக்களின் மொழியாகவும் செந்தமிழே வழங்கிவந்தது. ஆனால் இந்தஇந்தத் தாக்கம் அரசர்களிடம் மட்டுமே இருந்தது. மக்களிடம் மலையாளமே வழங்கி வந்ததாகவும் இவர் கருதுகின்றார். எனவே பிரதான திராவிட மொழியான தமிழுக்கு மலையாளத்துக்கு உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது ஆகும்.
 
ஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது