திருவிதாங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
== வரலாறு ==
 
சேரநாட்டின் தென்பகுதியில் [[ஆய்நாடு]], வேணாடு ஆகிய சிற்றரசுகள் தன்னாட்சி பெற்று இயங்கி வந்தன. ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு [[பொதியமலை]] சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் [[திருவல்லா]] வரை பரவியிருந்தது.<ref> பக். 7, வே.தி. செல்வம், கன்னியாகுமரி மாவட்டம்-அரசியல் சமூக வரலாறு</ref>. இப்படியாக வேணாடு, தற்போதைய [[இந்தியா]]வில் தமிழ் நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தையும்]], [[கேரளா|கேரள]] மாநிலத்தின் [[கொல்லம் மாவட்டம்|கொல்லம்]], [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம்]] ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது. தொடக்கத்தில் [[திருவிதாங்கோடு|திருவிதாங்கோடும்]] பின்பு [[கல்குளம்|கல்குளமும்]] வேணாட்டின் தலைநகராக இருந்தன.
 
சேர மன்னன் [[சேரமான் பெருமாள்]] காலத்தில் (கி.பி 789-825) வேணாட்டை 300 பேர் கொண்ட குழு நிருவாகம் செய்ததாக கிருட்டிண சைன்யா கூறியுள்ளார்<ref> பக். 3, A history of Malayalam Language and Literature, கிருட்டிண சைன்யா</ref>. கி.பி 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர நாட்டை ஆட்சி செய்த வீரராகவச் சக்கரவர்த்தி, சேர நாட்டில் [[அகதி|அகதிகளாக]] வந்து தங்கியிருந்த [[யூதர்கள்|யூதர்களுக்கு]] குடியிருக்க நிலக்கொடை அளித்த அறப்பட்டயத்தில் வேணாட்டு அரசரும் கையெழுத்திட்டுள்ளார்<ref> பக். 6, A History of Kerala</ref>.
வரிசை 46:
வேணாட்டின் புகழ்பெற்ற பேரரசரும் இறுதி அரசரும் இவராவர். இவர் அரசனின் சகோதரி மகன். [[திற்பாப்பூர் பரம்பரை]]யில் வந்தவர். இவர் [[மருமக்கள் வழி]] வந்தவர் என்ற கூற்றுமுள்ளது.
 
இவர் காலத்தில் நாடு வடக்குப் பகுதியில் விரிவாக்கம் கண்டு [[கொச்சி]] வரை விரிந்து பரவியிருந்தது. இவர் சிறந்த நிர்வாகியாயிருந்தார். நாட்டின் நிலங்கள் அளந்து முறை செய்யப்பட்டன. நிர்வாக வசதிக்காக நாடு 80 கரைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் கரைகாரர் என அழைக்கப்ட்டனர். அரசருக்கு ஆலோசனை சொல்ல துரத்துக்காரர் என எண்மர் நியமிக்கப்பட்டனர்.
 
வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இந்தியாவின் பெரும்பகுதியை அடக்கியாண்ட போதும் வேணாடு பகுதியில் [[வணிகம்|வணிகக்]] குழுக்களாகவே செயல்படமுடிந்தது. பால மார்த்தாண்டவர்மன் காலத்தில் [[ஆங்கிலேயர்]], [[போர்த்துக்கீசர்|போர்ச்சிகீசியர்]], டச்சுக்காரர் ஆகியோர் எவ்வளவோ முயன்றும் அவரவர் வணிக வளாகங்களுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டனர்<ref> கே.கே. குசும்பன், History of Trade and commerce in Travancore</ref>. ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் ரகசியமாக படைகளை வருவித்து தாக்குதலில் ஈடுபட்ட போதும் [[குளச்சல் சண்டை|குளச்சல் சண்டையில்]] தோல்வியையே தழுவினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது டச்சுக்கார அதிகாரிகளின் அதிகப்படியான கோரிக்கைகளை எழுப்பிய போது வெகுண்டெழுந்த மார்த்தாண்டவர்மன் 'நான் ஐரோப்பா மீது படையெடுக்க முடிவு செய்துள்ளேன், அங்கு சந்தித்துக்கொள்வோம்' என்று கூறியதால் டச்சு அதிகாரிகள் வேணாட்டை விட்டு வெளியேறினர்<ref> R.G. Alexander, Monumental remanis of Dutch East India</ref>. கி.பி 1758ம் ஆண்டு மர்மமான முறையில் [[மரணம்]] அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவிதாங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது