மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
===முள்ளந்தண்டிலிகள்===
[[மண்புழு]] போன்ற [[வளையப் புழு]]க்களில் (அனெலிடா) வாயுப்பரிமாற்றம் ஈரலிப்பான தோலினூடாக நடைபெறுகின்றது. எனவே இவற்றில் தோலைத் தவிர வேறு மூச்சுத் தொகுதி உறுப்புகள் இருப்பதில்லை. பூச்சிகளில் வாதனாளித் தொகுதி மூலம் உடற்கலங்களுக்கும் வளிக்குமிடையே நேரடித்தொடர்பு ஏற்படுத்துவதனால் மூச்சுத்தொகுதி கலச்சுவாசத்துக்கு உதவுகின்றது. எனவே பூச்சிகளில் குருதி மூலம் சுவாச வாயுக்கள் காவப்படுவதில்லை. நீர்வாழ் முள்ளந்தண்டிலிகளில் பூக்கள் மூலம் வாயுப்பரிமாற்றம் நிகழும்.
சில முள்ளந்தண்டிலிக் கூட்டங்களும் அவற்றின் சுவாசக் கட்டமைப்புக்களும்:
* பூச்சிகள், ஆயிரங்காலிகள், நூற்றுக்காலிகள் - [[வாதனாளித் தொகுதி]]
* அரக்னிட்டுக்கள் (சிலந்தி, தேள் போன்றன) - [[ஏட்டு நுரையீரல்]]
* அரனிகோலா போன்ற பொலிகீட்டுக்கள் - வெளிப் பூக்கள்
* கடலட்டை போன்ற Holothuroidea முட்தோலிகள்- கழியறைக்குரிய சுவாச மரம்
* கிரஸ்டேசியா, மொலஸ்கா - பூக்கள்
 
===முள்ளந்தண்டுளிகள்===
வரி 35 ⟶ 41:
=====கட்டுப்பாடு=====
[[File:Illu_conducting_passages-ta.svg|thumb|right|]]
சுவாசச் செயன்முறை [[நீள்வளைய மையவிழையம்|நீள்வளைய மையவிழையத்தால்மையவிழையத்தாலும்]], வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இது தன்னாட்சி நரம்புத்தொகுதியின் ஒரு பகுதியாகும். சிறிது நேரத்துக்கு இச்சையுடன் சுவாசத்தைக் கட்டுப்படுத்த இயலுமாயினும் அனேகமான நேரங்களில் நீள்வளைய மையவிழையத்தால் சுவாசம் எம் இச்சையில்லாமலேயே சுவாசம் கட்டுப்படுத்தப்படும். நரம்புத் தொகுதியின் நீள்வளைய மையவிழையத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் சுவாசம் நிறுத்தப்பட்டு இறப்பு நேரிடும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவுத் தளம்பலுக்கு ஏற்றபடி சுவாசச் செயன்முறை கட்டுப்படுத்தப்படும். குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவு அதிகமானால் (உதாரணமாக அதிக உடற்பயிற்சியின் போது) அது தொகுதிப் பெருநாடி (குருதியின் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) மற்றும் மூளையிலுள்ளநீள்வளைய மையவிழையத்திலுள்ள (மூளைய முன்னாண் பாய்பொருளில் ஏற்படும் pH மாற்றத்துக்கு உணர்திறன் உள்ளது) இரசாயன உணரிகளால் உணரப்பட்டு நீள்வளைய மையவிழையத்துக்குத் தகவல் அனுப்பப்படும். நீள்வளைய மையவிழையம் நுரையீரலைத் தூண்டி அதிக தடவை சுவாசிக்கச் செய்யும். எனவே தான் வேகமாக ஓடுதல் போன்ற உடற்பயிற்சியின் போது அதிகம் சுவாசிக்கின்றோம்.
நீள்வளைய மையவிழையத்தில் pneumotaxic center, மற்றும் apneutic centre எனும் இரு நரம்புப் பிரதேசங்கள் முறையே உட்சுவாசத்தை நிரோதிப்பதிலும், உட்சுவாசத்தத்தைத் தூண்டுவதிலும் ஈடுபடுகின்றன. இவற்றில் நியூமோடாக்சிக் பிரதேசம் நேரடியாக வரோலியின் பாலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. நுரையீரலின் சுவாசப்பைச் சிறுகுழாய்களிலும் ஈர்த்த வாங்கிகள் (stretch receptors) உள்ளன. அதிகளவில் வளி நுரையீரலுக்குள் உள்ளெடுக்கப்படும் போது இவை உட்சுவாசத்தை வரோலியின் பாலத்தினூடாக நியூமோடாக்சிக் பிரதேசத்தைத் தூண்டுவதால் நிரோதிக்கின்றன.
பொதுவாக ஓய்விலுள்ள போது மனிதர்கள் நிமிடத்துக்கு 12 தொடக்கம் 16 தடவை மூச்சு விடுகின்றனர். (சராசரி-15)
 
 
=====உட்சுவாசம்=====
 
இது உயிர்ப்பான செயற்பாடாகும். வெளிப்பழுவிடைத் தசைகள் சுருங்க உட்பழுவிடைத் தசைகள் தளரும். விலாவென்புகளும் மார்புப்பட்டையும் வெளிநோக்கி அசையும். பிரிமென்றகடு சுருங்கித் தட்டையாகும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு அதிகரித்து நுரையீரலினுள் வளியமுக்கம் வேகமாகக் குறைவடையும். இத்தாழமுக்கத்தை ஈடு செய்ய வெளியிலிருந்து காற்று உள்வருகின்றது. உள்வரும் காற்றிலுள்ள ஆக்சிசன் வாயு சுவாசப்பைச் சிற்றறைகளிலுள்ள குருதி மயிர்க்கலன்களிலுள்ள குருதியில் கலக்கும் அதே வேளை குருதியிலுள்ள காபனீரொக்சைட்டு நுரையீரலிலுள்ள வளியில் கலக்கின்றது. இவ்வாறு முலையூட்டிகளில் உட்சுவாசம் நடைபெறும். பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
சாதாரணமான இச்சையின்றிய, சந்தமான உட்சுவாசத்தில் வெளிப் பழுவிடைத் தசைகளும் (external intercostal muscles), பிரிமென்றகடும் மாத்திரமே பங்கெடுக்கின்றன. எனினும் வலிந்த உட்சுவாசத்தின் போது மேற்கூறிய தசைகள் அதிகமாக சுருங்குவதுடன் இவற்றுக்கு உதவியாக மார்பு மற்றும் கழுத்திலுள்ள தசைகளும் சுருங்கும். இதனால் அதிக வளி உள்ளெடுக்கப்படும்.
 
=====வெளிச்சுவாசம்=====
 
இது உயிர்ப்பற்ற செயற்பாடாகும். (சக்தி தேவைப்படுவதில்லை). வெளிப்பழுவிடைத் தசையும், [[பிரிமென்றகடு]]ம் தளருவதால் விலாவென்புகளும் மார்புப் பட்டையும் உள்நோக்கி அசையும். பிரிமென்றகடு மேல்நோக்கி அசையும். இதனால் நெஞ்சறைக் குழியின் கனவளவு குறைந்து அமுக்கம் அதிகரிக்கும். இதனால் காபனீரொக்சைட்டு நிறைந்த வளி வெளிநோக்கித் தள்ளப்படும். வேகமான சுவாசத்தில் மாத்திரம் வெளிச்சுவாசத்தில் சக்தி தேவைப்படுவதுடன் உயிர்ப்பான செயன்முறையாகின்றது.
வலிந்த வெளிச்சுவாசம் உயிர்ப்பான செயற்பாடாகும். இதன் போது உட் பழுவிடைத் தசைகளும், வயிற்றுப்புறத் தசைகளும் சுருக்கமடைவதால் அதிகளவு வளி வெளியேற்றப்படும்.
 
==நோய்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது