ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
*உரை திருத்தம்*
வரிசை 22:
}}
 
'''ஒடியா மொழி''' (பழைய பெயர் '''ஒரியா மொழி''') [[இந்தியா]]வின் [[ஒடிசா]] மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது<ref>[http://ibnlive.in.com/news/orissa-becomes-odisha-oriya-becomes-odia/199349-60-117.html ஒரியா ஒடியாவாக மாற்றம் - ஐபிஎன் லைவ்]</ref><ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியாவாக மாற்றம்- தட்சு தமிழ் ]</ref> . இம் மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், [[ஜார்க்கண்ட்சார்க்கண்ட்]] மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒடிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான [[குஜராத்குசராத்]]திலும் ஒடியர்கள் வாழுகிறார்கள். இம் மாநிலத்தில் உள்ள [[சூரத்]] நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒடியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒடியா, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று ஆதி என்னும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. இம் மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த [[இந்திய-ஈரானிய மொழிகள்]] பிரிவின், [[இந்திய-ஆரிய மொழிகள்]] குழுவைச் சேர்ந்தது.
 
இம் மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ [[மகமொழி]]களான [[வங்காள மொழி]], [[மைதிலி மொழி]], [[அசாமிய மொழி]] ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம்.
 
== ஒடிய இலக்கியம் ==
ஒரியா மொழிக்கு சுமார் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நல்ல வளமான [[இலக்கியம்|இலக்கிய]] வரலாறு உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[சரள தாசர்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தை]] ஒரியாவில் மொழி பெயர்த்தார். இதனால் இவர் ஒரிசாவின்ஒடிசாவின் [[வியாசர்]] என்று போற்றப்படுகிறார். உண்மையில், சமஸ்கிருத நூல்களான மகாபாரதம், [[இராமாயணம்]], [[ஸ்ரீமத் பாகவதம்]] போன்றவற்றை மொழிபெயர்த்ததின் மூலமே ஒரிய மொழி பொதுமைப் படுத்தப்பட்டது. ஜகனாத தாஸ் என்பவர் பாகவதத்தை ஒரியாவில் மொழிபெயர்த்தார், இதுவே ஒரியாவின் எழுத்து மொழியைப் பொதுமைப்படுத்த உதவியது. ஒரியாவுக்கு, சிறப்பாகப் பக்தி அடிப்படையிலான வலுவான கவிதை மரபும் உண்டு.
 
இம் மொழியில் [[உரைநடை]] ஒரு பிற்கால வளர்ச்சியாகும். [[பக்கீர் மோகன் சேனாபதி]], [[மனோஜ் தாஸ்]], [[பிபுத்தி பட்நாயக்]], [[பிரதிபா ராய்]], சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், [[காலினி சரண் பாணிக்கிரகி]], [[ஹரி ஹர தாஸ்]], [[கோபிநாத் மொகந்தி]] என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை [[எழுத்தாளர்]]கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் [[கவிதை]]யே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் [[கவிஞர்]]களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, [[ராமகாந்த ராத்]], சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஒடியா_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது