நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
===வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம்===
''நாகதீப'', ''மணிபல்லவம்'' ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக ''நயினாதீவு''டன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், ''நாகதீவு'' (நகதிவ) எனும் பெயர் [[யாழ்ப்பாணக் குடாநாடு]] முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் விளங்குகின்றது. ஆகவே, "நாகதீப" அல்லது "நாகதீபம்" என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும்.
இனி வல்லியுரக் கோயிற் பொற்சாசனத்தைப்பற்றி எழுதிய தொல்பொருட் பகுதி அதிபர் டாக்டர் பரணவித்தான அவர்கள், "நாகதீபம் எங்கேயுள்ளது என்பதைப் பற்றி ஆராய்ச்சியறிஞர் சந்தேகங் கொள்வதற்கிடமின்றிச் செய்துவிட்டது இச்சாசனம். அதன்படி யாழ்ப்பாணமே நாகதீவ என வழங்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இக்கொள்கையினையே இலங்கையின் சரித்திரச் சுருக்கம் எழுதிய எச்.டபிள்யு.கொட்றிங்டன் அவர்களும் சூளவம்சத்தை மொழிபெயர்த்த கைகர் அவர்களும் ஏற்றுக்கொணடனர்.
 
வல்லிபுரக்கோயிற் பொற்சாசனம் இது.
1.ஸிதக4 மஹிரஜ ரஜெஹி அமெதெ
2.இஸிகி, ரய நகதி, வ புஜமெனி
3.ப3த3 கர - அதனெஹி3 பியகு3 கதிஸ
4. விஹர கரிதெ
(இதிற் குறிக்கப்பட்டுள்ள எண்கள் சமஸ்கிருத அசஷர வரிசை எண்கள், எடுத்தலோசையுடன் உச்சரிக்கப்படல் வேண்டும்.)
 
 
 
இதன் பொருள்: "வாசப அரசன் காலத்தில் நாகதீவை ஆட்சிபுரிந்த அமத்தன் ( அமைச்சன்) இஸிகிரயன் என்பவன் பதகர அ(த்)தனையில் பியகுகதிச விகாரையைக் கட்டினான்" என்பது, பிக்குராகுலரின் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்த நண்பர் "Badakra Atana" என ஆங்கில எழுத்துக்களிலிரந்த உருவத்தை "படகர ஆற்றான்" எனனத் தவறாகப் பெயாத்துவிட்டார், இதன் சரியான உச்சரிப்பு "பதகர அதன" எனக்குறிக்கப்பட்ட இடம் எத்திசையிலுள்ளதென்பதைத் திடப்படுத்துவதற்குச் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கு ஓர் அரிய சந்தர்ப்பம் எனப் பிக்கு ராகுலர் கூறியிருப்பதால் வடகரை நாடு எனப் பொருள் கொள்வது சாலும். வல்லிபுரக் கோயிலில் இச்சாசனங்காணப்பட்டதெனின் அப்பகுதியை விளக்கும் வடகரை நாடு என்ற பொருள் மிகவும் பொருத்தமுடையது. இப்பொற்சாசனத்திலிருந்தும் யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலே தமிழ்மொழி தான் பேசப்பட்டு வந்ததென்பது பெறப்படுகின்றது
 
===நம்பொத்த===
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது