திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி விரிவு
வரிசை 1:
[[File:Pope Francis Travels.svg|thumb|திருத்தந்தை பிரான்சிசின் திருத்தூது பயணங்கள்]]
[[File:Dilma e Francisco - Audiência 20-03-2013 (2).jpg|thumb|திருத்தந்தை பிரான்சிசு, பிரேசில் நாட்டுத் தலைவர் தில்மா ரூசெஃப் என்பவரை உலக இளையோர் நாள் கொண்டாட்ட பயணத்தின்போது சந்தித்தல்.]]
'''திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்''' என்னும் தலைப்பின் கீழ், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013, மார்ச்சு 13ஆம் நாள் பொறுப்பேற்ற [[திருத்தந்தை பிரான்சிசு]] வத்திக்கான், இத்தாலி மற்றும் வெளிநாடுகளுக்குத் திருப்பயணியாகச் சென்று, தமது சமயப்பணியை ஆற்றிட மேற்கொண்ட முக்கிய பயணங்கள் தரப்படுகின்றன.
[[File:Pope Francis hugs a man in his visit to a rehab hospital.jpg|thumb|ரியோ டி ஜனேரோவில் திருத்தந்தை பிரான்சிசு, மருத்துவ மனையில் ஓர் இளைஞரை அரவணைத்தல்]]
 
==பயணப் பட்டியல்==
{| class="wikitable sortable"
|-
வரி 14 ⟶ 12:
| 3 || [[உரோமை]]/கசால் தெல் மார்மோ சிறைச்சாலை||மார்ச்சு 28|| 2013 || [[பெரிய வியாழன்]]. திருத்தந்தை பிரான்சிசு, சிறைப்பட்ட இளையோரின் காலடிகளைக் கழுவினார்.
|-
| 4 || [[இத்தாலி]]/லாம்பெடூசா தீவு||சூலை 8|| 2013 || [[உரோமை|உரோமைக்கு]] வெளியே முதல் அலுவல்சார் பயணம். அடைக்கலம் தேடி நாடுபெயர்ந்த பலர் கடலில் லாம்பெடூசா தீவு அருகே உயிர் இழந்ததற்கு இரங்கல் தெரிவித்தார்.
|-
| 5 || [[பிரேசில்]] ||சூலை 22-28|| 2013 || [[உலக இளையோர் நாள் 2013]]
வரி 57 ⟶ 55:
| 13 || [[பிலிப்பீன்சு]] || சனவரி 15-19 || 2015 ||
|}
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் பற்றி சில தகவல்கள்==
2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி.
 
2015ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட முதல் பன்னாட்டுப் பயணம் இலங்கை, பிலிப்பீன்சு ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கு ஆகும். இந்த ஆசியப் பயணத்தில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பது சிறப்பு.
 
திருத்தந்தை ஒருவர் இலங்கைக்குப் பயணமாகச் செல்வது இது மூன்றாவது தடவை ஆகும். முதலில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1970இல் இலங்கை சென்றார். அப்போது அங்கே அவர் தங்கியது இரண்டு மணி நேரமே மட்டுமே. 1995இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இலங்கை சென்றார். அவ்வமயம் அவர் அங்கே ஒரு நாள் முழுதும் செலவிட்டார். ஆனால் இப்போது திருப்பயணியாக இலங்கை செல்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அங்கே மூன்று நாள்கள் (சனவரி 13-15, 2015) தங்குவது சிறப்பு.
 
===இலங்கையில் கிறித்தவம்===
21 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் 72% மக்கள் பவுத்தமதத்தைச் சார்ந்தவர்கள். 12% இந்துக்கள்; 9% முசுலிம்கள்; சுமார் 7% கிறித்தவர்கள் (சுமார் 6.1% கத்தோலிக்கர்; 1.3% பிற கிறித்தவர்கள்). 1.2 மில்லியன் கத்தோலிக்க மக்கள் 12 மறைமாவட்டங்களில் ஆயர்களின் ஆளுகைக்குள் அமைவர். கொழும்பு மட்டுமே உயர் மறைமாவட்டம். அதன் தலைவர் [[கர்தினால் மால்கம் ரஞ்சித்]]. கத்தோலிக்கர் எண்ணிக்கை கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, மன்னார், திருக்கோணமலை போன்ற மறைமாவட்டங்களில் கணிசமாக உள்ளது.
 
கத்தோலிக்கர் நடுவே பல இன்னல்களுக்கு நடுவே உழைத்தவர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் [[யோசப் வாசு|அருளாளர் யோசேப்பு வாஸ்]] என்னும் குரு. இவர் இந்தியாவின் கோவாவிலிருந்து இலங்கை சென்று, தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணிபுரிந்தார். 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கால்வினிய சபை சார்ந்த டச்சு நாட்டவர் குடியேற்ற ஆதிக்க ஆட்சி நடத்திய காலத்தில் கத்தோலிக்கர் துன்புற்றனர். அவர்களுக்குப் பணிசெய்வதில் யோசேப்பு வாஸ் (1651-1711) ஈடுபட்டார். அவருடைய பக்தி வாழ்வையும் பணியையும் போற்றும் வகையில் அவருக்கு அருளாளர் பட்டத்தைத் [[திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] 1995இல் தமது இலங்கைப் பயணத்தின் போது வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பின், இலங்கைக்குப் பயணமாக வருகின்ற [[திருத்தந்தை பிரான்சிசு]] யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகிறார் (சனவரி 14, 2015).
 
===விமான நிலையத்தில் வரவேற்பு===
திருத்தந்தை பிரான்சிசுக்கு கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சி முடிவுற்று புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பதவியேற்ற சில நாள்களில் திருத்தந்தையின் வருகை நிகழ்ந்ததால் அவரை வரவேற்க புதிய அதிபர் சிறீசேனா விமான நிலையம் வந்திருந்தார். மேள தாளம் முழங்க, நடனக்காரர்கள் அசைய, வண்ணங்கள் நிறைந்த கம்பளிகளால் அலங்கரிக்கப்பட்ட 40 யானைகள் எழிலுற அணிவகுத்து நிற்க, திருத்தந்தை பிரான்சிசுகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்கள் பாடல் குழு ஆங்கிலம், இத்தாலியம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வரவேற்புப் பாடல் எழுப்பியது. இராணுவ மரியாதை அளிக்கும் வகையில் 21 வேட்டுகள் வெடிக்கப்பட்டன.
 
===ஊர்வலம்===
வழக்கமான குண்டுதுளைக்காத வாகனம் தமக்கு வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறிவிட்டதால் அவர் திறந்த வாகனத்திலேயே பயணம் செய்து ஊர்வலமாக வந்தார். மக்கள் கூட்டம் வழிநெடுக வெள்ளையும் மஞ்சளும் இணைந்த வத்திக்கான் கொடிகளையும் இலங்கைக் கொடிகளையும் அசைத்தவாறு அவருக்கு வரவேற்பு அளித்தனர். 20 கிலோமீட்டர் தொலை இவ்வாறே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தை பயணம் சென்றார்.
 
===அமைதித் தூது===
விமான நிலையத்தில் இறங்கிய நேரத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிசு தமது பயணத்தின் குறிக்கோள்களை எடுத்துக் கூறினார். தாம் இலங்கை நாட்டுக்கு அமைதியின் தூதுவனாக வருவதாக அவர் கூறினார். இந்தியப் பெருங்கடலின் முத்துப் போல விளங்குகின்றது இலங்கைத் தீவு என்று அவர் புகழ்ந்தார். “ஒரு பயங்கரவாதப் போராட்டத்தை முறியடித்தபிறகு எமது அரசு எல்லா மக்களிடையேயும் அமைதியையும் நட்பையும் வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது” என்று அதிபர் சிறீசேனா கூறினார்.
 
===திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரை===
ஆங்கிலத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிசு கூறியது கீழே தமிழில் தரப்படுகிறது:
 
“எழில்மிகு இலங்கைத் தீவு இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அறியப்படுகிறது. அதைவிடவும் மேலாக இங்கு வாழ்கின்ற மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். கலாச்சார, சமயச் செல்வங்கள் இங்கு ஏராளமாகவே உள்ளன. இங்கு நான் ஒரு திருப்பணியாளனாக வருகிறேன். கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் என்ற முறையில் இங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கமூட்ட வருகிறேன். எனது பயணத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு அருளாளர் யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற கொண்டாட்டம் ஆகும். அவர் கிறித்தவ நற்பண்புகள் கொண்டவராக, சமய இன வேறுபாடு பாராட்டாமல் எல்லா மனிதரையும் சமமாக ஏற்று மதித்தார். அவர் காட்டிய முன்மாதிரிகை நமக்கு இன்றும் பொருந்தும். மேலும் கத்தோலிக்க திருச்சபை, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்கள் மட்டிலும் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளது என்பதற்கும் எனது வருகை ஓர் அடையாளமாக உள்ளது. இலங்கை நாட்டு சமூகத்தில் கத்தோலிக்க திருச்சபையும் பங்கேற்க விரும்புவதையும் காட்டுகிறது.”
 
“நாம் வாழும் உலகில் எத்தனையோ மக்கள் குழுக்கள் தமக்குள்ளேயே போர்ச்செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பது துயரமான ஓர் உண்மை. கடந்தகால, சமகால வேறுபாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் களைந்து, தமக்குள்ளே நல்லுறவுகளை ஏற்படுத்த இயலாத நிலையில் இனம், சமயம் சார்ந்த இழுபறி நிலைகள் ஏற்பட்டு, சில வேளைகளில் வன்முறை மோதல்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இலங்கையில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்தது. அதன்பிறகு அமைதியை மீண்டும் கொணர்வதற்கும், போரினால் விளைந்த காயங்களைக் குணப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால அநீதிகளையும் போரின் விளைவாக எழுந்த பகைமை, வெறுப்பு போன்றவற்றையும் களைந்துவிடுவது எளிதன்று. நன்மை செய்வதன் வழியாக(காண்க: உரோமையர் 12:21), அமைதி, நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகிய நற்பண்புகளைச் செயல்படுத்துவதன் வழியாக மட்டுமே இது சாத்தியமாகும்.”
 
“நல்லிணக்கமும் நல்லுறவும் உருவாக வேண்டும் என்றால் உண்மையை அறிகின்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் பழைய காயங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொருளாகாது, மாறாக உண்மை வெளிவந்தால் மட்டுமே உண்மையான நீதியும், ஒன்றிப்பும், நலமும் மீண்டும் நிலைபெறும்.”
 
“அன்பு நண்பர்களே, இலங்கையில் நடைபெறுகின்ற நல்லிணக்க உருவாக்க முயற்சியிலும், அமைதிநிலவும் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் பல மதங்கள் ஈடுபட்டுள்ளன. அவை தம் பணிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றால் எல்லாரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். அனைவரின் குரலும் கேட்க வேண்டும். அனைவரும் தங்கள் விருப்புகள், கவலைகள், தேவைகள், பயங்கள் போன்றவற்றை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். முக்கியமாக, அவர்கள் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெற வேண்டும். தமக்குள்ளே நிலவுகின்ற நியாயமான வேறுபாடுளை மதிக்க வேண்டும். இவ்வாறு ஒரே குடும்பமாக வாழ்ந்திடக் கற்றுக்கொள்ள வேண்டும். பணிவோடும் திறந்த மனத்தோடும் ஒருவர் ஒருவருக்குச் செவிமடுக்கும்போது அவர்களது பொது எதிர்பார்ப்புகளும் மதிப்பீடுகளும் இன்னும் அதிகத் தெளிவாகத் துலங்கும். வேற்றுமை என்பது அஞ்சத்தக்கதாகத் தோன்றாது, மாறாக, அனைவரின் வளர்ச்சிக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும். இவ்வாறு, நீதி, ஒன்றிப்பு, சமூக நல்லுறவு ஆகியவற்றை அடைகின்ற வழிமுறையும் தெளிவாகத் தெரியும்.”
 
“இந்த நாட்டில் நிகழ்கின்ற மறுசீரமைப்பு மக்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்ற கட்டுமானப் பணிகள், உடல்சார் தேவைகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்ததன்று. அதற்கும் மேலாக, மனித மாண்பை மேம்படுத்தல், மனித உரிமைகளை மதித்தல், ஒவ்வொருவரையும் சமூகத்தில் முழுமையாகச் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை செயலாக்கம் பெற வேண்டும். இலங்கையின் அரசியல், சமய, கலாச்சார அமைப்புகளும் தலைவர்களும் தமது சொற்களாலும் செயல்களாலும் இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நன்மை விளையவும் நலம் ஏற்படவும் உழைப்பதாக இருந்தால் இங்கு பொருள்வளம் மட்டுமன்று, அருள்வளமும் பெருகிப் பலுகும்.”
 
“அதிபர் அவர்களே, நண்பர்களே, நீங்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு மீண்டும் நன்றுகூறுகிறேன். உங்களோடு நான் செலவிடப்போகின்ற இந்நாட்கள் நம்மிடைய நட்பையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். இலங்கை நாட்டின்மீது இறை ஆசி நிறைவாகப் பொழியப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்தியப் பெருங்கடலின் முத்தாக விளங்குகின்ற இந்த எழில்மிகு நாடு மக்களுக்கு வளமையையும் அமைதியையும் கொணர வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.”<ref>[http://www.news.va/en/news/pope-francis-arrival-speech-in-sri-lanka-3 இலங்கை விமான நிலையத்தில் திருத்தந்தையின் ஏற்புரை]</ref>
 
==குறிப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவலக இணையத்தளம்]
 
==குறிப்புகள்==
[[பகுப்பு:திருத்தந்தை பிரான்சிசு]]