வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 335:
சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட வாழைக்காயை எண்ணெயில் வாட்டி உப்பு, காரம் சேர்த்து வாழைக்காய் பொறியல் சமைக்கப்படுகின்றது. சில நாடுகளில் பிளந்த [[மூங்கில்|மூங்கிலில்]] வைக்கப்பட்டு மிகவெப்பத்தில் வாட்டப்பட்டும் வாழையிலையில் பசையுள்ள அரிசியால் சுற்றி நீராவியில் வேகவைத்தும் சமைக்கப்படுகின்றது. வாழைப்பழப் [[பழப்பாகு]]ம் தயாரிக்கப்படுகின்றன. சில [[தெற்கு ஆசியா|தெற்கு ஆசிய]] [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளில் வாழைக்காய் பஜ்ஜிகள் பயணிகளிடையே மிகவும் பரவலாக உள்ளன. வாழைக்காயை துண்டுகளாக்கி, நீர் இறுத்து தயாரிக்கப்படும் ''வாழைக்காய் வறுவல்'' அல்லது ''நேந்திரம் சிப்சு'' மிகவும் புகழ்பெற்றுள்ளது. உலர்ந்த வாழைக்காய்களைக் கொண்டு வாழைப் பொடியும் தயாரிக்கப்படுகின்றது. வாழைப்பழத்திலிருந்து சாறு எடுப்பதுக் கடினமாகும்; அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதி உடனேயே கூழாகி விடுகின்றது. இதனால் பாலுடன் கலந்து ''பனானா மில்க்சேக்'' தயாரிக்கப்படுகின்றது. பிலிப்பீனிய சமையல்முறையில் வாழைப்பழம் முதன்மை பங்கு வகிக்கின்றது. ''மருயா'', ''துர்ரோன்'', ''[[ஹாலோ-ஹாலோ]]'' போன்ற உணவிறுதி சிற்றுண்டிகளில் முதன்மையான பண்டமாக வாழைப்பழம் உள்ளது. [[கேரளம்|கேரளாவில்]] வேக வைத்தும் (''புழுங்கியது''), பொறியலாக்கியும்,<ref name=pazhampachadi>{{cite news |title=Pazham Pachadi |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> வறுவலாகவும் (''உப்பேரி'')<ref name=Hindu130413>{{cite news |title=The taste of Kerala |url=http://www.thehindu.com/features/magazine/the-taste-of-kerala/article4605855.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Ignatius |last=Pereira |date=April 13, 2013}}</ref> மாவில் வறுத்தும் (''பழம்பொரி'')<ref name=Hindu110228>{{cite news |title=A snack & a snare |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> சமைக்கப்படுகின்றன. [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] நாடுகளில் கேரளாவின் பழம்பொரியை ஒத்த [[பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)]] பரவலாக உண்ணப்படுகின்றது. இத்தகைய உணவுப்பண்டம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ''பனானா ஃபிரிட்டர்'' எனப்படுகின்றது.
===வாழைப்பூ===
[[File:Banana Inflorescence 002.jpg|thumb|right|வாழைப்பூ]]
[[File:Banana Inflorescence.jpg|thumb|right|வாழைப்பூ]]
வாழைப்பூ தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளில் [[காய்கறி]]யாகப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite book |url=http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25 |title=Encyclopedia of Asian Food |year=1998 |last=Solomon |first=C |publisher=New Holland Publishers |location=Australia |edition=Periplus |accessdate=2008-05-17 |isbn=0-85561-688-1|archiveurl= http://web.archive.org/web/20080603142416/http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25|archivedate= June 3, 2008 <!--DASHBot-->|deadurl= no}}</ref> பச்சையாகவோ வேகவைத்தோ இரசங்கள், பொறியல்கள், வறுத்த உணவுவகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.<ref>[http://www.dudaonline.com/southeast-asia/thailand/fried-banana-flowers/ Fried banana flowers]. Duda Online (December 14, 2009). Retrieved on 2011-10-02.</ref> [[கூனைப்பூ]]வைப் போலவே வாழைப்பூவின் பூவடிச் செதில்களும் பூவரும்புகளும் உண்ணக்கூடியவை.<ref>{{cite web|title=Banana Flowers|url=http://localfoods.about.com/od/Bananas/ss/Banana-Flowers.htm|publisher=About.com|accessdate=2014-05-13|author=Molly Watson}} See also the link on that page for Banana Flower Salad.</ref>
 
===இலைகள்===
[[வாழை இலை]]கள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, [[தெற்கு ஆசியா]] மற்றும் பல [[தென்கிழக்காசியா]] நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் "தட்டுக்களாகவும்" பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது. <ref name=morton>{{cite web|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16|archiveurl= http://web.archive.org/web/20090415160027/http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html|archivedate= April 15, 2009 <!--DASHBot-->|deadurl= no}}</ref> தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது