திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவு
சி சேர்க்கை
வரிசை 91:
“அதிபர் அவர்களே, நண்பர்களே, நீங்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு மீண்டும் நன்றுகூறுகிறேன். உங்களோடு நான் செலவிடப்போகின்ற இந்நாட்கள் நம்மிடைய நட்பையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். இலங்கை நாட்டின்மீது இறை ஆசி நிறைவாகப் பொழியப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்தியப் பெருங்கடலின் முத்தாக விளங்குகின்ற இந்த எழில்மிகு நாடு மக்களுக்கு வளமையையும் அமைதியையும் கொணர வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.”<ref>[http://www.news.va/en/news/pope-francis-arrival-speech-in-sri-lanka-3 இலங்கை விமான நிலையத்தில் திருத்தந்தையின் ஏற்புரை]</ref>
 
==அருளாளர் யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்==
2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு கொழும்பில் காலிமுகத் திடலில் (Galle Face Green) வைத்து அருளாளர் யோசேப் வாசைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.<ref>[http://en.radiovaticana.va/news/2015/01/14/pope_francis_homily_for_canonization_of_st_joseph_vaz/1118130 திருத்தந்தை பிரான்சிசு யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற காணொளிக் காட்சி]</ref>
 
யோசேப் வாசு 1651, ஏப்ரல் 21ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் பக்திநிறைந்த கத்தோலிக்கப் பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்தார். அப்போது கோவா போர்த்துகீசியரின் குடியேற்ற ஆதிக்கத்தில் இருந்தது. யோசேப் வாசு கோவா மறைமாவட்டத்தின் குருவாக 1676இல் திருநிலைப்படுத்தப்பட்டார். கோவாவில் “புனித பிலிப்பு நேரியின் மன்றாட்டுக் குழு” (Oratory of St. Philip Neri) என்னும் குழுமத்தை உருவாக்கி, கிறித்துவின் நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிக்கத் தொடங்கினார். இலங்கையில் கத்தோலிக்க மக்கள் கால்வினிய புரட்டஸ்தாந்து குழுவைச் சார்ந்த குடியேற்ற ஆதிக்கத்தவரான டச்சுக்காரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஆன்மிக உதவி தேவைப்படுகிறது என்றும் அறிந்த யோசேப் வாசு உடனேயே கோவாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டார். ஆனால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததால் யோசேப் வாசு ஓர் ஏழைத் தொழிலாளியாகத் தம்மை மாற்றிக்கொண்டு அந்த வேடத்தில் இலங்கைக்குள் நுழைந்து, அங்கு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் நடுவே கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். அவர் நோயாளருக்குச் செய்த சேவையைப் பாராட்டி, கண்டி அரசர் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்தார். சுமார் 24 ஆண்டுகள் இலங்கையில் பணிபுரிந்த யோசேப் வாசு தமிழிலும் சிங்களத்திலும் பல கத்தோலிக்க மன்றாட்டு நூல்களை எழுதினார். மக்கள் பணியிலும் இறைவன் பணியிலும் தம் வாழ்க்கையைச் செலவிட்ட யோசேப் வாசு கண்டியில் 1711, சனவரி 16ஆம் நாள் உயிர் நீத்தார்.
 
அவருக்குத் [[திருத்தந்தை யோவான் பவுல்]] தமது இலங்கைப் பயணத்தின்போது 1995, சனவரி 21ஆம் நாள் அருளாளர் பட்டம் வழங்கினார்.
 
===புனிதர் பட்ட நிகழ்ச்சி===
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவலக இணையத்தளம்]