திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 92:
 
==அருளாளர் யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்==
2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு கொழும்பில் காலிமுகத் திடலில் (Galle Face Green) வைத்து அருளாளர் யோசேப் வாசைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.<ref>[httphttps://enwww.radiovaticanayoutube.vacom/news/2015/01/14/pope_francis_homily_for_canonization_of_st_joseph_vaz/1118130watch?v=2SQ1iW7APHk திருத்தந்தை பிரான்சிசு யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற காணொளிக் காட்சி]</ref>
 
யோசேப் வாசு 1651, ஏப்ரல் 21ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் பக்திநிறைந்த கத்தோலிக்கப் பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்தார். அப்போது கோவா போர்த்துகீசியரின் குடியேற்ற ஆதிக்கத்தில் இருந்தது. யோசேப் வாசு கோவா மறைமாவட்டத்தின் குருவாக 1676இல் திருநிலைப்படுத்தப்பட்டார். கோவாவில் “புனித பிலிப்பு நேரியின் மன்றாட்டுக் குழு” (Oratory of St. Philip Neri) என்னும் குழுமத்தை உருவாக்கி, கிறித்துவின் நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிக்கத் தொடங்கினார். இலங்கையில் கத்தோலிக்க மக்கள் கால்வினிய புரட்டஸ்தாந்து குழுவைச் சார்ந்த குடியேற்ற ஆதிக்கத்தவரான டச்சுக்காரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஆன்மிக உதவி தேவைப்படுகிறது என்றும் அறிந்த யோசேப் வாசு உடனேயே கோவாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டார். ஆனால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததால் யோசேப் வாசு ஓர் ஏழைத் தொழிலாளியாகத் தம்மை மாற்றிக்கொண்டு அந்த வேடத்தில் இலங்கைக்குள் நுழைந்து, அங்கு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் நடுவே கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். அவர் நோயாளருக்குச் செய்த சேவையைப் பாராட்டி, கண்டி அரசர் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்தார். சுமார் 24 ஆண்டுகள் இலங்கையில் பணிபுரிந்த யோசேப் வாசு தமிழிலும் சிங்களத்திலும் பல கத்தோலிக்க மன்றாட்டு நூல்களை எழுதினார். மக்கள் பணியிலும் இறைவன் பணியிலும் தம் வாழ்க்கையைச் செலவிட்ட யோசேப் வாசு கண்டியில் 1711, சனவரி 16ஆம் நாள் உயிர் நீத்தார்.
வரிசை 99:
 
===புனிதர் பட்ட நிகழ்ச்சி===
திருத்தந்தை பிரான்சிசு அருளாளர் யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் அளித்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்காக காலிமுகத் திடலில் கூடியிருந்தனர். திருத்தந்தை பிரான்சிசு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்த ஊர்தியில் வந்தார். வழியில் அவ்வப்போது குழந்தைகளை ஆசிர்வதித்தார். ஊர்தியிலிருந்து கீழே இறங்கி, சக்கர வண்டிகளில் இருந்த ஊனமுற்றோரைத் தொட்டு ஆசிர்வதித்தார். ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணி அவருடைய கையில் ஒரு சிறிய தாளைத் திணித்தார். அதைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை அதைத் தம் துணைவர் ஒருவரிடம் கொடுத்தார்.
 
திருத்தந்தை வருகைதந்த வேளையில் வரவேற்புப் பாடலும் நடனமும் தமிழிலும் சிங்களத்திலும் நிகழ்ந்தது. பின்னர் திருப்பலி தொடங்கியது. திருத்தந்தை ஆங்கிலத்திலும் இலத்தீனிலுமாக திருப்பலி செபங்களை மொழிந்தார். அவருடைய மறையுரை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டாலும், அதன் மொழிபெயர்ப்பு சிங்களத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டன.
 
திருப்பலியின் தொடக்கத்தில் ”தூய ஆவியே எழுந்தருளி வாரும்” என்ற பாடலும், தொடர்ந்து புனிதர் பிரார்த்தனையில் இலத்தீன் மொழியில் பாடப்பட்டன. பின் திருத்தந்தை பிரான்சிசு, யோசேப் வாஸ் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி, புனிதர் வரிசையில் சேர்ப்பதாக அறிவித்தார். உடனே கோவில் மணிகள் முழங்கின. “என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன்” என்ற தமிழ்ப் பாடல் காணிக்கைப் பாடலாக, பல்லிசை அமைப்பில் இசைக்கப்பட்டது.
 
===திருத்தந்தை ஆற்றிய மறையுரை===
 
திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சில பகுதிகள்:
 
”அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, இன்று நாம் ஜோசப் வாஸ் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை, பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். உலகின் எல்லைவரை வெளிப்படும் தமது அன்பையும், இரக்கத்தையும் பற்றிய இறைவிருப்பத்தை, இந்தத் திருப்பலி வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. தாம் அனுப்பிய திருமகனும், நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து, நற்செய்தியை அனைத்துலகிற்கும் அறிவிக்க தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்கள் வழியாக, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ற மறைபரப்புப் பணியாளர்கள் வழியாக, இறைவன் தன் அன்பை வெளிப்படுத்தினார்.
 
இலங்கை மக்கள்பால் இறைவன் கொண்டுள்ள அன்பின் வல்லமைமிக்க அடையாளத்தை புனித ஜோசப் வாஸ் அவர்களில் நாம் காண்கிறோம். அத்துடன், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், புனிதத்துவத்தில் வளர்ந்திடவும், மன்னிப்பு, இரக்கம், நட்புறவு எனும் கிறிஸ்துவின் செய்திக்கு சாட்சிகளாய் திகழவும் கிடைத்த ஓர் அழைப்பாகவும் காண்கிறோம்.
 
புனித ஜோசப் வாஸ் அவர்கள், நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார். மூன்று காரணங்களை இவண் குறிப்பிடலாம்:
 
முதலாவதாக, அவர் ஓர் எடுத்துக்காட்டான குருவாகத் திகழ்ந்தார். இறைவனுக்கும், அயலவருக்குமான பணிக்கு அர்ப்பணிப்பு என்பதன் பொருளை புனித ஜோசப் வாஸ் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார். அவரைப் போல நாமும் இறைவேண்டலில் ஈடுபடுகின்ற மக்களாக, அனைவருக்கும் கிறித்துவை அறிவித்து அவர்களை அன்புசெய்வோராக மாறிடவேண்டும். அவர் நற்செய்திக்காகத் துன்புற்றார்; மனமுவந்து மறைபணி ஆற்றினார்; மக்கள்பால் அன்பும் பரிவும் காட்டினர். இவ்வாறு அவர் நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.
 
இரண்டாவதாக, பிறர் எந்த இனத்தவர், சமயத்தவர், சமூக நிலையினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை புனித ஜோசப் வாஸ் நமக்குக் காட்டுகிறார். இன்றும் கூட, புனிதரின் எடுத்துக்காட்டானது இலங்கைத் திருச்சபையின் கல்வி, சுகாதார நிறுவனங்கள் மற்றும் இரக்கச் செயல்பாடுகள் வழியே தொடர்கின்றது. அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். நம் இறைவழிபாடு உண்மையில் ஊன்றியிருக்கும்போது, அது இனப் பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது, மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை, மற்றவரின் மாண்பு, சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அது விளைவிக்கும் என்பதை புனித ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது.
 
இறுதியாக, புனித ஜோசப் வாஸ் அவர்கள், கிறித்தவ நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்துகொள்கின்ற ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பல்வேறு மதச் சூழலில், அர்ப்பணிப்பு, தளரா முயற்சி மற்றும் தாழ்ச்சியுடன், நற்செய்தியின் உண்மையையும், அழகையும் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். இத்தகைய அணுகுமுறை, இயேசுவின் இந்நாள் சீடர்களுக்கும் பொருந்தும்.
 
புனித ஜோசப் வாஸ் அவரக்ளைப் பின்பற்றி, இந்நாட்டின் கிறிஸ்தவ மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படவும், இலங்கை சமூகத்திலே சமாதானம், நீதி மற்றும் ஒப்புரவுக்காக தங்கள் மேலான பங்களிப்பை வழங்கிடவும் நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் எமது புதிய புனிதரின் வேண்டுதல்களுக்குக் கையளிக்கும் அதேவேளையில், எனக்காக மன்றாடும்படி உங்களை வேண்டி நிற்கின்றேன்.”
 
===சமய சுதந்திரம் பற்றிய வரலாற்று ஏடு===
திருப்பலியின் இறுதியில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் எழுபதாயிரம் டாலரை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கென அவரிடம் கொடுத்தார். எங்கள் நாடு ஏழை நாடு, ஆயினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு உதவ விரும்புகிறோம் என்று சொல்லி, அந்த அன்பளிப்பை வழங்கினார்.
 
திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருச்சபைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருச்சபைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஆவணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.<ref>[http://blogs.wsj.com/indiarealtime/2015/01/14/popes-daring-gift-to-sri-lankan-bishops/ சமய சுதந்திர ஆவணம்]</ref>
 
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவலக இணையத்தளம்]