"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
}}
 
'''கழுகு''' (''eagle'') என்பது ஒரு வலுவான பெரிய [[பறவை]]யையும் அதன் இனத்தையும் குறிக்கும். கழுகுகள் அக்சிபிட்ரிடே (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. [[யூரேசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.<ref>del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6</ref> இவற்ரைஇவற்றை விட இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.
 
இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியதுகூர்மையானது. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து விலங்குகளைக் வல்லூகிரால் பற்றுவதைத் தமிழில் ''ஏறு'' என்னும் சிறப்புக் கலைச்சொல்லால் குறிக்கப் பெறும் [''பருந்தின் ஏறுகுறித் தொரீஇ ([[புறநானூறு]] 43, 5)'']. வானில் இருந்து இடிவிழுவதையும் ஏறு என்னும் சொல்லால் குறிக்கப்பெறும். ஏறு என்பதற்கு தமிழில் ''பருந்தின் கவர்ச்சி'' என்றும் பெயர்.
[[படிமம்:Eagle In Flight 2004-09-01.jpeg|thumb|left|200px|நீண்ட இறக்கைகளை விரித்து கழுகு பறக்கத் துவங்குகிறது]]
 
==வகைகள்==
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
 
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை [[வெண்டலைக் கழுகு|வெண்டலைக் கழுகும்]], [[பொன்னாங் கழுகு|பொன்னாங் கழுகும்]] ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண்கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.
 
== அருகிவரும் கழுகு ==
உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அருகிவருகிறது. சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் சில நாடுகளில் கழுகுகளை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். 1940க்குப் பின்னரே கழுகுகளின் அழிவு வெகுவிரைவாக இடம்பெற்று வருகிறது. காடுகளை அளித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும்.அநேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பாரிய பிர்ரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேரக்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்கு வெற்றியளித்த போதும் அவை அருகிவருவதை தடுக்க முடியாதுள்ளது.
 
==இரையை பிடிக்கும் விதம்==
இவை உயரமாகப்பறந்து வட்டமாகச்சுற்றி இரையை தேடுகின்றன. இவைகளின் கண் மிகவும் கூர்மையானது. இதனால் தனது இரையை தூரத்திலிருந்தே கண்டுகொள்ளும். மேலிருந்து இரையை கண்டால் மிகவும் வேகமாக கீழிறங்கி இரையை தூகிச்சென்றுதூக்கிச்சென்று உண்ணும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
==உசாத்துணை==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 அமுதம் தகவல் களஞ்சியம்]
17

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1787577" இருந்து மீள்விக்கப்பட்டது