திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 127:
 
திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருச்சபைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருச்சபைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஆவணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.<ref>[http://blogs.wsj.com/indiarealtime/2015/01/14/popes-daring-gift-to-sri-lankan-bishops/ சமய சுதந்திர ஆவணம்]</ref>
===திருத்தந்தை பிரான்சிசு மடுமாதா கோவிலைச் சந்தித்தல்===
திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில், காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்மிக்க மடுமாதா கோவிலுக்குச் சென்று, மக்களை சந்தித்து அன்னை மரியாவிடம் வேண்டுதல் நடத்திய நிகழ்ச்சி ஆகும்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150114_pope_mannarvisit மடுமாதா கோவிலில் பிரான்சிசு]</ref>
 
2015, சனவரி 14ஆம் நாள் பிற்பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு மடு நகரில் தூய செபமாலை அன்னை ஆலயத்திற்குப் பவனியாக வந்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்தப் பவனியின்போது அவர் திறந்த ஊர்தியில் வந்துகொண்டிருக்க, மேள தாளம் ஒலிக்க, நாதசுரம் தமிழ்ப் பாணியில் இசைக்கப்பட்டது. சக்கர வண்டியில் அமர்ந்திருந்தோரை சந்தித்தார். வழியில் மக்களோடு கலந்து நடந்தார். கோவில் படிகளை வந்தடைந்ததும் அவர் குத்துவிளக்கு ஏற்றினார். அமைதியின் அடையாளமாக ஒரு புறாவைப் பறக்கவிட்டார். மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசேப்பு இராயப்பு, திருத்தந்தையை வரவேற்று உரை ஆற்றினார். அதன் தமிழாக்கம்:
 
பெருமதிப்புக்குரிய திருத்தந்தையே, இன்று இங்கு கூடியுள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் சார்பாக பிள்ளைகளுக்குரிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். உண்மை, நீதி, ஒப்புரவு ஆகிய இவற்றில் அடிப்படையைக் கொண்ட அமைதியின் தூதுவராக தாங்கள் எங்களின் இலங்கை நாட்டுக்கு வந்துள்ளீர்கள். நம் ஆண்டவர் மற்றும் புனித அசிசி பிரான்சிசின் அடிச்சுவடுகளில் ஏழைகள் மற்றும் துன்புறுவோர்மீது தாங்கள் கொண்டுள்ள வியத்தகு அன்புக்கு நன்றி. ஆசியாவில் முதல் கிறிஸ்தவ மறைசாட்சிகளைக் கொண்டிருக்கும் இடமாக மன்னார் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலிருந்த யாழ்ப்பாண மன்னரால் 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மன்னார் மறைசாட்சிக் கிறிஸ்தவர்களின் இரத்தம் வடக்கு மற்றும் இலங்கை முழுவதன் விசுவாசத்தின் வித்தாக மாறியுள்ளது. கடுமையான காட்டுப் பகுதியில் 400 ஆண்டுகளாக இருக்கும் மடு திருத்தலமும் வளமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. செபமாலை அன்னை திருத்தலமாகிய இங்கு மக்கள் விசுவாசத்தில் ஆழப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்னையின் விண்ணேற்பு விழாவன்று 6 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர். திருத்தந்தையே தங்களின் இப்பயணமும், செபங்களும் எம் தாய் நாட்டுக்கு அமைதியையும் வளமையையும் கொண்டு வருவதாக. இந்நேரத்தில் நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்குரிய அன்பையும் பணிவையும் மதிப்பையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். திருஅவையையும் பரந்த உலகையும் தூண்டி வழிநடத்தும் தங்களின் மேய்ப்புப்பணிகளில் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பாரக. அன்னை மரியா தங்களை அவருக்கு நெருக்கமாக வைத்திருப்பாராக.”<ref>[http://ta.radiovaticana.va/news/2015/01/14/மடுத்திருத்தலத்தில்_மன்னார்_ஆயர்_ஜோசப்_இராயப்பு_வரவேற்புரை/1118265 மடுமாதா கோவிலில் திருத்தந்தை பிரான்சிசுக்கு வரவேற்புரை]</ref>
 
தொடர்ந்து அன்னை மரியா வணக்கம் தொடர்பான வேண்டுதல்கள் நிகழ்ந்தன. “ஓ, பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவே, நான் உம்மை ஆராதனை செய்கின்றேன்” என்ற பாடல் தமிழில் பாடப்பட்டது. மத்தேயு நற்செய்தியிலிருந்து கீழ்வரும் பகுதி வாசிக்கப்பட்டது:
“துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத்தேயு 5:4,9-10).
 
===மடுத்திருத்தலத்தில் திருத்தந்தையின் உரை===
திருத்தந்தை, அங்கு அன்னை கன்னி மரியா திருவழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி நாட்டில் அமைதிக்காகச் செபித்தார். திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
 
”அன்புமிக்க சகோதர, சகோதரிகளே, நாம் நம் அன்னையின் இல்லத்தில் இருக்கின்றோம், மருதமடு அன்னையின் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு திருப்பயணியும் தன் சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர முடியும். ஏனெனில், இங்குதான் மரியாள், தமது திருமகன் இயேசுவின் பிரசன்னத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றார். தமிழர்களும், சிங்களவர்களும் இலங்கையராக, ஒரே குடும்பத்தின் உறுப்பினராக, இங்கு வருகை தருகின்றனர். தமது இன்ப, துன்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
 
இலங்கை நாட்டின் இதயத்தையே பிளந்த நீண்ட காலப் போரினால் துன்பப்பட்ட குடும்பங்கள் இன்று இங்கே பிரசன்னமாக இருக்கின்றன. பயங்கர வன்முறை மற்றும் இரத்தக்களரிகளின் ஆண்டுகளில், வடக்கிலும் தெற்கிலுமாக எத்தனையோ மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்திருத்தலத்தோடு சம்பந்தப்பட்ட துயர நிகழ்வுகளை எந்தவோர் இலங்கையரும் மறக்கவே முடியாது. இலங்கையில் ஆரம்பக் கிறிஸ்தவர்களின் வருகையோடு தொடர்புடைய, வணக்கத்துக்குரிய மரியாவின் திருஉருவம் அவரின் திருத்தலத்திலிருந்து (பாதுகாப்பு கருதி) எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சோகமான நாளையும் மறக்கவே முடியாது.
 
ஆனாலும்கூட நம் அன்னை உங்களோடு எப்போதும் உடனிருந்தார். ஒவ்வோர் இல்லத்திற்கும், காயம்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமைதியான வாழ்வுக்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் அவர் அன்னையாக இருக்கிறார். இலங்கை வாழ் மக்களை, கடந்த கால மற்றும் நிகழ் காலத்தின் அனைத்து ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி வருவதற்காக இன்று நன்றி கூறுகிறோம்.
 
நம் அன்னையின் பிரசன்னத்திற்காக இன்று நாம் அவருக்கு நன்றி கூற விழைகின்றோம். காயங்களைக் குணமாக்கி, உடைந்த உள்ளங்களில் அமைதியை மீண்டும் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் இயேசு மட்டுமே. அவரை நமக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அன்னைக்கு நன்றி கூறுகின்றோம். மேலும், இறை இரக்கத்தின் அருளை நம்மேல் பொழிந்திட வேண்டுகிறோம். அத்துடன் நமது பாவங்கள், மற்றும் இந்நாடு எதிர்கொண்ட அனைத்துத் தீமைகளுக்கும் பரிகாரம் செய்ய, தேவையான அருளை வேண்டுகிறோம்.
 
இதனைச் செய்வது, இலகுவானதல்ல. ஆனாலும் கூட, ஒருவரையொருவர் உண்மையான மனஸ்தாபத்துடன் அணுகவும், உண்மையான மன்னிப்பைக் கொடுக்கவும் அதனை நாடவும், இவ்வாறாக, நாம் இறை அருளைப் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிக்கவும், மற்றும் சமாதானத்தை அடைவதற்குமான கடினமான இந்த முயற்சியிலே, அன்னை மரியா இங்கிருந்து நம்மை ஊக்கமூட்டுகிறார், வழி நடத்துகிறார், அழைத்துச் செல்கிறார்.
 
தமிழ், சிங்கள மொழி பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள், இழந்துவிட்ட ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புகின்ற முயற்சியில் அன்னை மரியாள் தன் பரிந்துரைகள் வழியாக, துணை நிற்க வேண்டுவோம். போரின் முடிவில் அன்னையின் திருச் சுரூபம் மடுத் திருத்தலத்திற்கு மீண்டும் வந்ததுபோல், அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவு மற்றும் தோழமையைப் புதுப்பிக்கும் உணர்வுடன் இறைவனிடம் திரும்பி வந்துசேர மன்றாடுவோம்.
 
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் ஒருவர், ஒருவருக்காக மன்றாடுவோம். இந்தத் திருத்தலமானது, செபத்தின் இல்லமாக, அமைதியின் இருப்பிடமாகத் திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால், ஒப்புரவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக. ஆமென்.”<ref>[http://ta.radiovaticana.va/news/2015/01/14/மடுத்திருத்தலத்தில்_திருத்தந்தையின்_உரை/1118237 மடுத்திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிசின் உரை]</ref>
 
பொது மன்றாட்டு தமிழில் இசையமைப்பிலும், சிங்களத்திலும் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீதி, அமைதி, சம உரிமை நிலவிட மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை சிறப்பு ஆசி வழங்கியபோது மக்கள் செபமாலை, சிறு சுரூபங்கள் மற்றும் படங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். “சர்வேசுரா சுவாமி, இரக்கமாக எங்களைப் பாரும். கன்னி மரியாயே, மருதமடுமாதாவே, எங்களுக்காக இயேசுவை மன்றாடும்” ஆகிய மன்றாட்டுகளை மக்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள். மடுமாதா சுருபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு, அதைக்கொண்டு மக்களுக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். திருத்தந்தைக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் சுரூபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்று முத்தம் அளித்த பிரான்சிசு, அதை இறுதிவரைத் தம் கைகளில் தாங்கிக்கொண்டிருந்தார். அப்போது “எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசி அளித்திடுவீர்” என்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரான்சிசு மடுமாதா சுரூபத்திற்கு ஒரு செபமாலையை அணியாகச் சூட்டினார்.
 
==வெளி இணைப்புகள்==