"இலங்கை மலாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|iso3=sci
}}
'''இலங்கை கிரியோலே மலாய்''', [[இலங்கை]]யில் பேசப்படும் [[மலாய்]] மொழியின் கொச்சை வழக்கு ஆகும். இலங்கையில் வாழும் ஐந்து வகையான [[இலங்கை மலாயர்|மலாயர்]] இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் வாழும் இடத்திற்கேற்ப, [[தமிழ்]], [[சிங்களம்|சிங்களச்]] சொற்கள், இலக்கண விதிகளின் தாக்கம் இவர்களது மொழியில் இருப்பதைக் காணலாம். இலங்கை மலாய் என்பது பத்தாவி, சாவகம், மலாயு போன்ற மொழிகளின் கலப்பு ஆகும். தற்போது இவர்கள் இலங்கை மக்கள் தொகையில் 0.3 விழுக்காட்டினராக, எண்ணிக்கையளவில் 46,000 உள்ளனர். இம்மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே வாழ்கிறது. எப்பொழுதாவது இதை தமிழ், சிங்கள எழுத்துக்களில் எழுதியுள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் [[ஜாவி எழுத்துமுறை]]யை ஒத்த குண்டால் எழுத்துமுறை உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. தற்கால இளைஞர்கள் சிங்களத்தையும் தமிழையும், ஆங்கிலத்தையும் கற்பதால்/பேசுவதால், இம்மொழி வீழ்ச்சியடைந்து வருகிறது.
 
[[பகுப்பு:மலாய-பொலினீசிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790027" இருந்து மீள்விக்கப்பட்டது