மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
 
'''யாங் டி பெர்துவான் அகோங்''' ({{lang-en|The Yang di-Pertuan Agong}}, {{lang-ms|Yang di-Pertuan Agong}}) என்பவர்,<ref name=mygovt>[http://mygov.malaysia.gov.my/EN/Main/MsianGov/YangDiPertuanAgong/Pages/YangdiPertuanAgong.aspx The Yang di-Pertuan Agong is the Supreme Head of State as provided by the Constitution. The full title for His Majesty is Seri Paduka Baginda Yang di-Pertuan Agong.]</ref> [[மலேசியா]] நாட்டின் அரசுத் தலைவர் (மாமன்னர்) ஆவார். 1957-ஆம் ஆண்டு, [[பிரித்தானியா]]விடம் இருந்து [[மலாயா கூட்டமைப்பு|மலாயா கூட்டரசு]] தன்னுரிமை பெற்ற போது, இந்தத் தலைமைப் பதவி உருவாக்கப்பட்டது.
 
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில்,<ref name=mygovt/> தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், '''ராஜா பரமேஸ்வரி அகோங்''' ''(Queen Lady Consort)'' என அழைக்கப் படுகிறார்.<ref name=Constitution of Malaysia 1957>[http://www.commonlii.org/my/legis/const/1957/4.html The Consort of the Yang di-Pertuan Agong (to be called the Raja Permaisuri Agong)]</ref>
 
யாங் டி பெர்துவான் அகோங் அவர்களை, தமிழில் மாட்சிமை தங்கிய என்றும் ஆங்கிலத்தில் ''ஹிஸ் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள். ராஜா பரமேஸ்வரி அகோங் அவர்களை ''ஹெர் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள்.
 
==மாமன்னரின் அதிகாரங்கள்==
மலேசியாவின், [[அரசியல்சட்ட முடியாட்சி|அரச அமைப்புக்கு உட்பட்ட முடியரசில்]], யாங் டி பெர்துவான் அவர்களுக்கு, [[அரசியலமைப்பு|அரசியலமைப்பில்]] மிகுந்த அதிகாரங்கள் உள்ளன. கூட்டரசின் நிருவாக அதிகாரம், யாங் டி பெர்துவான் அவர்களிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதை அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்த முடியும் என்றும் [[மலேசிய அரசியலமைப்பு]] குறிப்பிடுகிறது.<ref name=Constitution of Malaysia 1957/>
 
அமைச்சரவைக்குத் தலைமை வகிக்கும் பிரதமரை, யாங் டி பெர்துவான் அவர்கள்தான் நியமனம் செய்வார். நாட்டின் பொதுத் தேர்தலில், தேர்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் [[பிரதமர்]] தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதே சமயத்தில், யாரைப் பிரதமராகத் தேர்வு செய்வது எனும் விருப்புரிமை அதிகாரம், யாங் டி பெர்துவான் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்திற்கு அவரிடம் அனுமதி வழங்கப்படவில்லை.<ref name=Constitution of Malaysia 1957/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது