மூன்றாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 5:
==ஆட்சி==
 
மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் [[கொய்சாளர்போசளப் பேரரசு|போசாளர்]] உதவிக்கு வர வேண்டியதாயிற்று.
 
'''சுந்தர பாண்டியனின் படை எழுச்சி'''
வரிசை 15:
'''கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை'''
 
சுந்தர பாண்டியனுக்கு அடிப் பணிந்து ஆட்சி புரிந்து வந்த ராச ராசச் சோழன், போசள மன்னன் [[இரண்டாம் வீர நரசிம்மன்|வீர நரசிம்மனின்]] உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலு அடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டியக் கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.
 
'''கோப்பெருஞ்சிங்கன்'''
 
போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப் பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். [[இரண்டாம் வீர நரசிம்மன்|வீர நரசிம்மன்]] திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்துக் கொண்டான்.
 
ராச ராச சோழனை மீட்ட பின்புக் காவேரிக் கரை வரைச் சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப் பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_இராஜராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது