சந்தம் (ஒலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{wiktionary|சந்தம்}}
'''சந்தம்''' (Prosody) என்ற சொல், [[பல்பொருள் ஒரு மொழி]] ஆகும். இங்கு [[ஒலி]]யின் [[வண்ணம்]], [[அழகு]] என்றே பொருள் குறிப்பிடப்படுகிறது. சந்திக்கும் [[தன்மை]] சந்தமாகும். ஒலி, [[அலை]] போல் மீண்டும் சந்திப்பதால் இதற்குச் சந்தம் என்ற பொருள் வந்தது என்று [[தமிழிசைக் கலைக்களஞ்சியம்]] (தொ.II,ப.274) குறிப்பிடுகின்றது.‘சந்தஸ்’ என்ற [[வடசொல்]]லின், [[திரிபு|திரிபாகவும்]] கூறுவர். ([[முனைவர்]]. இ. அங்கயற்கண்ணி, [[திருப்புகழ்]]ப் பாடல்களில் சந்தக் கூறுகள் பக்கம்.362). இதனைத் [[தொல்காப்பியர்]], [[வண்ணம் (ஒலி) |வண்ணம்]] என்கிறார் . எனவே, சந்தம் என்ற சொல்லிற்கு '''வண்ணம்''' என்ற தமிழ்ச்சொல்லைச் சொல்லுதலே சாலச்சிறந்தாம். [[கர்நாடக இசை]]க் கலைஞர்கள், சந்தம் என்றே சொல்லுகின்றனர்.இந்திய பாரம்பரிய இசை இயல்பில் பாடும் திறனானது, [[மெல்லிசை]] ரீதியாக குறிப்பிட்ட [[இராகம்|ராகங்கள்]] மற்றும் '''சந்தம்''' ரீதியாக [[தாளம்|தாளங்கள்]] அடிப்படையிலானது ஆகும்.
 
==இந்து வேதங்களில் சந்தம்==
[[இந்து சமயம்|இந்து சமய]] [[வேதம்|வேத மந்திரங்களில்]] எத்தனை அடிகள் (பதங்கள்) எழுத்துக்கள் (அட்சரங்கள்) போன்றவற்றை நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தம் அல்லது சந்தஸ் எனப்படும். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத மொழியில்]] பல சந்தங்களைப் பற்றி சந்த சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:
 
#காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.
#ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.
#அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.
# ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.
# பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.
#திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.
#ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.
 
[[புராணம்|புராணங்கள்]] மற்றும் [[இதிகாசம்|இதிகாசங்கள்]] அனுஷ்டுப் சந்தமே பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
*[[ஒலி]]
"https://ta.wikipedia.org/wiki/சந்தம்_(ஒலி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது