"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
== தோற்றமும் வளர்ச்சியும் ==
தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்''-ஆக செயல்படத் தொடங்கியது.
1990-ம் ஆண்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்,திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் வெளிமாநிலங்களுக்கும், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் மாநிலத்திற்கு உள்ளேயும் சேவைகைள வழங்கியது.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் பிற்காலத்தில் ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1996-ம் ஆண்டு ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம் மற்றும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் இணைக்கப்பட்டு மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
 
== சேவைகள் ==
இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான [[மதுரை மாவட்டம்|மதுரை]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 16 பணிமனைகள் உள்ளன. இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்([[திருவனந்தபுரம்]],[[பாண்டிச்சேரி]]) அமைந்துள்ளன. இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு [[நாகர்கோவில்]] பணிமனையில் அமைந்துள்ளது.
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1793240" இருந்து மீள்விக்கப்பட்டது