கரிமத்தை சேகரித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உலகம் வெப்பமாதல், காலநிலை மாற்றம், Carbon Sequestration
(வேறுபாடு ஏதுமில்லை)

10:56, 26 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:கார்பன் அகற்றம் வளிமண்டலத்தில் வாயுநிலையில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை பிரித்து சேமித்து வளிமண்டலத்தில் காரபன்டையாக்சைடு வாயுுவால் தோன்றும் காலநிலை மாற்றம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள "கார்பன் அகற்றம்" (Carbon Sequestration) என்ற இந்த நுட்பம் பயன்படுகிறது.

உலகம் வெப்பமாவதைத் தடுக்க அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், சில இடங்களில் நேரடியாக வளிமண்டலத்திலிருந்தும் கார்பன்டையாக்சைடு வாயு பிரித்து அடியாழத்தில் சேமிக்கப்படுகிறது. இதனால், வளிமண்டலத்தில் ஏற்படும் "பசுமை இல்ல விளைவுவை" தவிர்க்கலாம்.

நீண்டகாலத்துக்கு கார்பன்டையாக்சைடு வாயுவை சேமித்து வைப்பதன்மூலம் உலகம் வெப்பமயமாவதை தாமதிக்கலாம்.

கார்பன் உறிஞ்சிகள்

கார்பனை உறிஞ்சிக்கொள்ளும் இடங்களில் கார்பன்டையாக்சைடை செலுத்துவதன் மூலம் கார்பனை பிரித்து சேமிக்கலாம். இவ்வாறு உறிஞ்சிக்கொள்ளும் பொருட்கள் "கார்பன் உறிஞ்சிகள்" (Carbon sinks) எனப்படும். இவை இருவகைப்படும்:-

1. இயற்கை உறிஞ்சிகள்- பெருங்கடல்கள், காடுகள், மண் முதலியன. 2.செயற்கை உறிஞ்சிகள்,- கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகள்,அகழ இயலாச் சுரங்கங்கள் முதலியன.

கார்பன் அகற்றல் நுட்பம் புதியதல்ல. எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலில் உற்பத்தி திறனைக் கூட்டுவதற்கு கார்பன் அகற்றும்முறை நடைமுறையில் இருந்துவந்தது. சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கார்பன் அகற்றும்முறை இப்பொழுது அறிமுகமாகியுள்ளது.

படிநிலை

கார்பன் அகற்றுதலில் மூன்று படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

1. பிறவாயுக்களிலிருந்து கார்பன்டையாக்சைடு வாயுவை பிரித்தல்.

2. பிரிக்கப்பட்ட வாயுவை சேமிப்பிடத்துக்கு கொண்டு செல்லுதல்.

3. கார்பன்டையாக்சைடு வாயுவை வளிமண்டலத்தில் கலக்காத வண்ணம் பூமிக்கடியிலோ அல்லது கடலடியிலோ புதைத்தல்.

கார்பன் அகற்றல் முறைகள்

கார்பன் அகற்றல் நுட்பங்களாக பல்வேறு புதிய முறைகள் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானவை வருமாறு.

ஆழ்கடல் அகற்றம் (Ocean Seqestration)

ஆழ்கடல்களில் நேரடியாக செலுத்துவதன்மூலமோ அல்லது உரமூட்டல் (fertilization) வழியாகவோ கார்பனை அகற்றலாம்.

நில அகற்றம் (Terrestrial Sequestration)

மண்ணிலும் தாவரங்களிலும் மிகப்பெரும் அளவுக்கு கார்பன்டையாக்சைடு வாயு பிடிக்கப்பட்டுள்ளது. ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்துவதன்மூலம் கார்பனை அதிகமாக உறிஞ்சலாம். தாவர உடலங்கள் போன்ற அங்கக கரிமப் பொருட்களை மெதுவாக சிதைவடையச் செய்வதன்மூலமும் கார்பனை நிலைப்படுத்தலாம். நிலப்பயன்பாட்டு முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும் கார்பனை இயற்கையாக உறிஞ்சலாம்.

நிலவியல் அகற்றம் (Geological Sequestration)

பாறைகளில் உள்ள இயற்கையான துளைகள் மற்றும் இடைவெளிகளில் கார்பன்டையாக்சைடு வாயுவை செலுத்தி வெளியேறமுடியாமல் தடுத்து நிலைப்படுத்தலாம்.வருங்காலங்களில் இந்தமுறைமூலம் மிக அதிக அளவு கார்பன்டையாக்சைடு வாயுவை பிரித்து சேமிக்கமுடியும் என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.

நிலவியல் பிடித்தல் நுட்பங்கள் (Gelogical trapping mechanisms)

நீரியக்கபிடித்தல் (Hydrodynamic trapping)

மேல்மட்டத்தில் வாயு ஊடுறுவாத பாறைகளுக்கு கீழ் கார்பன்டையாக்சைடை சேமிக்கலாம். இப்பொழுது இயற்கை எரிவாயு இம்முறையில் சேமிக்கப்படுகிறது.

கரைத்துப்பிடித்தல் (Solubility trapping)

நீர்,எண்ணெய் போன்ற பொருட்களில் கார்பன்டையாக்சைடு கரையும். அதன்மூலம் இதைப்பிடிக்கலாம்.

கனிமமாக்கிப் பிடித்தல் (Mineral Carbonation)

கார்பன்டையாக்சைடு புவியில் உள்ள கனிமங்கள் மற்றும் திரவங்களிலுடன் வினைபட்டு நிலையான கார்பன் சேர்மங்கள் உருவாகின்றன. பொதுவாக கால்சியம், இரும்பு, மெக்னீசியம் கார்பனேட்டுகளாக இவை சேமிக்கப்படும்.

நீரியக்க பிடித்தல், கரைத்துப்பிடித்தல் முறைகளில் கார்பன் அகற்றம் நடைபெறுகின்றது. இவையிரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமத்தை_சேகரித்தல்&oldid=1795487" இலிருந்து மீள்விக்கப்பட்டது