"உம்பெர்த்தோ எக்கோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
'''உம்பெர்த்தோ எக்கோ''' (''Umberto Eco'', பி. ஜனவரி 5, 1932) ஓர் [[இத்தாலி]]ய [[குறியியல்|குறியியலாளர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[இடைக்காலம்|இடைக்கால]] ஆர்வலர், [[மெய்யியல்|மெய்யியலாளர்]], இலக்கிய விமர்சகர் மற்றும் எழுத்தாளர்.
 
இத்தாலியின் [[தூரின் பல்கலைக்கழகம்|தூரின் பல்கலைக்கழகத்தில்]] ஐரோப்பிய இடைக்கால மெய்யியல் மற்றும் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற எக்கோ, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் (1956-64) பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இத்தாலியின் தேசிய அலைபரப்பு ஊடக நிறுவனத்தில் பண்பாட்டு ஆசிரியராகவும், இத்தாலிய இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் [[மிலான்]] நகரின் போம்பியானி பதிப்பகத்தின் அபுனைவு (non-fiction) பிரிவின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் தான் [[குறியியல்]] பற்றி சிந்திக்கத் தொட்ங்கினார். தற்போது இத்துறையின் முன்னொடிகளில்முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். [[ஹார்வார்ட் பல்கலைக்கழகம்|ஹார்வார்ட்]] உட்பட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ள எக்கோ தற்போது [[போலோன்யா பல்கலைக்கழகம்|போலோன்யா பல்கலைக்கழகத்தின்]] கலைத்துறைத் தலைவராக உள்ளார்.
 
1956ல் அவரது முதல் புத்தகம் ''இல் பிராப்ளேமா எஸ்தெடிகோ இன் சான் தொமாஸ்கோ (Il problema estetico in San Tommaso)'' வெளியானது. குறியியல் பற்றியும் இடைக்காலத்தைப் பற்றியும் பல முக்கிய [[ஆய்வுக் கட்டுரைகளைகட்டுரை]]களை எக்கோ எழுதியிருந்தாலும், 1980ல் வெளியான ''இல் நொம் டெல்ல ரோசா'' (''Il nome della rosa'', [[ஆங்கிலம்]]: The Name of the Rose) என்ற புதினமே அவருக்கு உலகப்புகழ் பெற்றுத்தந்தது. [[வரலாற்றுப் புனைவு]], இடைக்கால மெய்யியல், [[இறையியல்]], [[துப்பறிவுப் புனைவு]] என பல பாணிகளின் கூறுகளைக் கொண்டிருக்கும் இப்புதினம், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வெற்றிக்குப் பின்னர் எக்கோ உலகெங்கும் அறியப்படுகிறார்.
 
==குறிப்பிடத்தக்க புதினங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1796617" இருந்து மீள்விக்கப்பட்டது