"கொத்தமங்கலம் சீனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

841 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
{{தகவற்சட்டம் நபர்
|name = கொத்தமங்கலம் சீனு
|image =
|caption =
|birth_name = வி. எஸ். சீனிவாசன்
|birth_date ={{birth date|df=yes|1910|2|17}}
|birth_place = [[வத்றாப்|வற்றாயிருப்பு]], [[விருதுநகர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
|death_date = தெரியவில்லை
|death_place =
|residence =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for =
|education =
| occupation = நாடக, திரைப்பட நடிகர், கருநாடக இசைப் பாடகர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|relatives=
|signature =
|website=
|}}
'''கொத்தமங்கலம் சீனு''' (பெப்ரவரி 17, 1910<ref name="kundoosi">{{cite journal | title=நட்சத்திரம் பிறந்தநாள் | journal=குண்டூசி | year=1951 | month=பெப்ரவரி | pages=பக். 35}}</ref> - ) தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.
 
வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, [[மதுரை]]க்கு அருகேயுள்ள [[வத்றாப்|வற்றாயிருப்பு]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.<ref name="chogamelar">{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/chogamelar-1942/article979086.ece | title=Chogamelar 1942 | publisher=[[தி இந்து]] | date=25 டிசம்பர் 2010 | accessdate=5 பெப்ரவரி 2015 | author=கை, ராண்டார் |authorlink= ராண்டார் கை}}</ref> [[கருநாடக இசை]]யில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி [[செட்டிநாடு]] பகுதியில் உள்ள கொத்தமக்கலம் வந்தார்.<ref name="chogamelar"/> ஆரம்பத்தில் கிராமபோன் இசைத்தட்டுகளில் இவரது பாடல்கள் வெளிவந்தன.<ref name="kundoosi"/> பின்னர் பாடகரும் நடிகருமான [[கொத்தமங்கலம் சுப்பு]]வுடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்தார். கருநாடக இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு, மாணவர்களுக்கு இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார்.<ref name="chogamelar"/>
 
இவரது குரல் இனிமை இவரை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. இவர் நடித்த முதல் திரைப்படம் ''சாரங்கதாரா''. இது 1935 ஆம் ஆண்டில் வெளிவந்தது.<ref name="kundoosi"/> இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் [[தாசி அபரஞ்சி]], பக்த சேதா, [[விப்ர நாராயணா (1938 திரைப்படம்)|விப்ரநாராயணா]] போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரது கடைசித் திரைப்படம் [[துளசி ஜலந்தர்]]. இது 1947 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1947 இற்குப் பின்னர் இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தாலும்,<ref name="chogamelar"/> இதற்குப் பின்னர் அவர் எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.<ref name="chogamelarkundoosi"/>
 
பிற்காலத்தில் இவர் [[அனைத்திந்திய வானொலி|வானொலி]]யிலும், மேடைக் கச்சேரிகளிலும் பாடி வந்தார்.<ref name="kundoosi"/>
1,15,455

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1802618" இருந்து மீள்விக்கப்பட்டது