இலை வண்ண அட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலை வண்ண அட்டை
No edit summary
வரிசை 1:
[[File:LCC PRABA.jpg|alt=Leaf chlour colour chart|thumb|இலை வண்ண அட்டை]]
 
= இலை வண்ண அட்டை =
 
இலை வண்ண அட்டை (Leaf colour chart (LCC) இதில் 1 முதல் 5 பசுமை நிற பட்டைகள் உள்ளன. நெல்லில் தழைச்சத்து மேளாண்மை இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது.
 
= அளவிடும் முறை =
வண்ண அட்டையைக் கொண்டு இலையின் வண்ணத்தை ஒப்பிடும்போது சூரியவெளிச்சம் இலையில் நேரடியாகப்படாதவாறு அளவிடுபவர் நிற்கவேண்டும். இலையின் பச்சைய அளவை மதிப்பிடுவது நடவு நட்ட 14ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 21 ஆம் நாளிலிருந்து ஒவ்வொரு வாரமும் செய்யப்படவேண்டும். மதிப்பீடு செய்ய ஏற்ற இலை முழுதாய் வெளிவந்துள்ள இலைகளில் மேலிருந்து மூன்றாவது ஆகும். மதிப்பீடு செய்ய குறைந்த பட்சம் 10 இலைகள் இங்கும் அங்குமாக தேர்வு செய்யப்படவேண்டும். அளவிடும் காலம் பொதுவாக ஒரு பயிருக்கு ஒரு குறிப்பிட்ட நேரமாக இருத்தல் வேண்டும் (காலை 8-10 மணிக்குள்). அளவீடு எண் ரகத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதிக தழைச்சத்தை தாங்க முடியாத இரகங்கள் (பொண்ணி) எனில்3.0 என்றும் மற்ற ரகங்களுக்கும், 4.0 ஆகும்.
 
= தழைச்சத்து இடுதல் =
முடிவு செய்யப்பட்ட அளவீடு பத்திற்கு ஆறு அல்லது அதற்கு மேல் குறிப்பிட்ட அளவைவிட கீழ் இருக்குமெனில் உடனே தழைச்சத்து இடப்பட வேண்டும். நட்ட ஏழு நாட்களில் 25 கிலோ / எக்டர் தழைச்சத்து அளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் 40 கிலோ / எக்டர் தழைச்சத்தை குருவை அல்லது குறுகிய கால இரகங்களுக்கு அளிகக் வேண்டும் அல்லது ஒவ்வொரு முறையும் 30 கிலோ / எக்டர் தழைச்சத்தினை மத்திய மற்றும் நீண்ட கால இரகங்களுக்கு அளிக்க வேண்டும். 35 முதல் 45 நாள் வயதுள்ள நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தினால் அதன் மகசூலை அதிகரிக்க 35 கிலோ / எக்டர் என்ற அளவில் தழைச்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும்<ref>http://www.researchgate.net/publication/225441137_Need_based_nitrogen_management_using_the_chlorophyll_meter_and_leaf_colour_chart_in_rice_and_wheat_in_South_Asia_a_review</ref>.
 
= நன்மைகள் =
இம்முறையில் தழைச்சத்து வீனாவது தவிர்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. சாகுபடிச்செலவு குறைகிறது
"https://ta.wikipedia.org/wiki/இலை_வண்ண_அட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது