இரண்டாம் உலகம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
}}
 
'''இரண்டாம் உலகம்''' ([[ஆங்கிலம்]]:Irandam Ulagam)= [[செல்வராகவன்]] இயக்கத்தில், [[ஆர்யா]], [[அனுஷ்கா செட்டி]] நடித்து 2013 நவம்பர் 22 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்.<ref>[http://sify.com/movies/tamil/fullstory.php?id=14793318 Dhanush-Selva quickie!<!-- Bot generated title -->]</ref>. இப்படத்திற்கு [[ஹாரிஷ் ஜயராஜ்]] இசையமைக்க, பின்னணி இசையை [[அனிருத் ரவிச்சந்திரன்]] அமைத்தார்.
 
==கதைக்களம்==
இருவேறு இணை உலகுகளில் நடக்கும் கதையே இரண்டாம் உலகம். நம் பூமிக்கு இணையான வேறொரு உலகில் காதல் அறவே இல்லை. ஆதலால், அங்கே பூக்கள் பூப்பதே இல்லை. இவ்வுலகிற்குக் காதல் மீண்டும் வர, பூக்கள் பூக்க ஏங்குகிறாள் அம்மா எனும் மந்திர சக்தி மிகுந்த பெண்.
 
பூமியில் நடக்கும் கதையில் மது பாலக்ருஷ்ணன் ([[ஆர்யா]]) எனும் இளைஞனை ரம்யா([[அனுஷ்கா செட்டி]]) எனும் பெண் மருத்துவர் காதலிக்கிறார். தன காதலை அவள் அவனிடம் சொல்ல, அவன் அதை மறுக்கிறான். பின்பு அவளது பணிகளைக் கண்டு காதல் கொள்ளும் மது, அவளிடம் தன காதலையும் சொல்கிறான். இதற்குள் தனக்கு நிச்சயம் ஆனதை அவள் சொல்ல, மது விரக்தியடைகிறான்.கோவாவிற்குக் கல்லூரி சுற்றுலா செல்லும் ரம்யாவை பின்தொடரும் மது, அங்கே அவளைக் கவர்கிறார். ரம்யா மதுவின் காதலை ஒப்புக்கொண்ட அன்றே திடீரென இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் இருக்கும் மதுவை ஓர் நாய் அவள் இறந்த இடத்திற்குக் கொண்டு சேர்க்கிறது. அங்கே மதுவின் ஊனமான தந்தை அவனிடம் ரம்யாவைத் தேடிச் செல்ல சொல்லி மறைந்து விடுகிறார். அக்கணமே தன் தந்தை இறந்த செய்தியை மது அறிகிறான். சோகத்தில் மூழ்கி நாடோடி போல் வாழும் அவனை, ஓர் ஆளில்லா மகிழுந்து மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே, அந்த வண்டியை ஓட்ட முயலும் மது படுகாயம் அடைந்து மயக்கத்திற்குச் செல்கிறான்.
 
பூமியின் இணை உலகில் நடக்கும் நிகழுவுகள் இக்கதையுடன் பிணைந்து நடக்கின்றன. அம்மா எனும் தெய்வத்தை வணங்கும் அந்த இணை உலகில், மறவான் ([[ஆர்யா]]) என்ற இளைஞன் , வர்ணா ([[அனுஷ்கா செட்டி]]) என்ற பெண்ணை மணம் புரிய எண்ணுகிறான். படைத் தளபதியின் மகனான மறவான் நண்பர்களுடன் குடித்து மகிழ்ச்சியாக திரிகிறான். மற்றும், அவனிடம் தான் எதிர்ப்பார்த்த வீரம் இல்லையென தந்தை வேதனைப்படுகிறார். வர்ணா காளான்களை அறுவடை செய்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் ஓர் வீரப்பெண். அம்மா தெய்வத்தை காக்க வீரர்ப்படை தேர்ச்சி நடக்கும் பொழுது வர்ணா அதில் பங்கேற்க முயல்கிறாள். அவளைக் கண்ட அரசன் அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கிறான். வர்ணாவை விடுவிக்க அரசனிடம் கோருகிறான் மறவான். அதற்கு, அரசன் காட்டில் வாழும் சிங்கத்தின் தோலை கேட்கிறான். வீழ்த்த முடியாத அந்த சிங்கத்துடன் போரிட்டுத் தோலுடன் திரும்பிய மறவானுக்கு, வர்ணாவை அரசக்கட்டளைக்கு இணங்க மணமுடிக்கின்றனர். சுதந்திரமாக இருக்க விரும்பும் வர்ணா அரசரை கொள்ள முயல்கிறாள். ஆதலால், அவளை வனவாசத்திற்கு அனுப்புகின்றனர். இதனால் விரக்தியடைந்து குடிக்கும் மறவான், நண்பர்களின் சவாலை ஏற்று, சுவாமிமலை எனும் ஆபத்தான மலையை ஏறுகிறான்.இதற்கிடையே இரண்டு உலகையும் இணைக்க முயற்சிக்கும் அம்மா, மலை உச்சியில் இருக்கும் மறவானின் கண்களுக்கு கோவாவில் இருக்கும் மதுவை தெரிய வைக்கிறாள். மாயவலையின் மூலம் பூமிக்கு வரும் மறவான் மதுவை காப்பற்றிக் கொண்டு அவன் உலகிற்கே திரும்ப செல்கிறான். மதுவிற்குச் சிகிச்சை அளித்து அவனை ஊருக்கு அறிமுகப் படுத்திகிறாள்டுத்திகிறாள் அம்மா.
 
அங்கே ரம்யாவைப் போல உருவம் கொண்ட வர்ணாவை காணும் மது, அவள் மீது காதல் கொள்கிறான். இதனால் அந்த உலகெங்கிலும் பூக்கள் மலர்கின்றன. இதனிடையே வர்ணாவை வீட்டில் தங்கவைததற்காகதங்கவைத்ததற்காக மரவானுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. அம்மாவை எதிரி நாட்டு படைகள் கடத்தவே, அவளைக் காப்பாற்ற மறவான் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான். ஆனால், எதிரிப்படையிடம் மாட்டிக்கொள்கிறான். அம்மா மற்றும் மறவானை காப்பாற்ற மது மற்றும் வர்ணா செல்கின்றனர். இறுதியில், மது மற்றும் மறவான் இருவரில், யாரை வர்ணா காதலிக்கிறாள் என்பதே படத்தின் முடிவு.<ref>{{cite web|url=http://tamilnews24x7.info/?p=3825 |title=இரண்டாம் உலகம் விமர்சனம்|publisher=TamilNews24x7|date= |accessdate=2013-11-24}}</ref>
 
==நடிப்பு==
வரிசை 58:
''இரண்டாம் உலகம்'' - இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். இப்படத்தின் ஏழு பாடல்களும் கவிஞர் [[வைரமுத்து]] எழுதினார். படத்தின் காட்சியமைப்புகள் அனைத்தும் காதலை மையக் கருவாக் கொண்டுள்ளதால், பாடல்களும் அதற்கேற்ப அழகு சேர்த்துள்ளது<ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/jayaraj-speaks-on-maatraan--irandam-ulagam/254710-71-174.html | title = மாற்றான் முதல் இரண்டாம் உலகம் வரை - ஹாரிஸ் ஜெயராஜுடன் கலந்துரையாடல் | publisher = ஐபிஎன் லைவ் | date = 4 May 2012, | accessdate = 2012-05-05}}</ref>. இப்படத்தில், திரு.[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] அவர்கள் பாடிய ''என் காதல் தீ'' என்ற பாடலை 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டது<ref>{{cite web | url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-12-04/sp-balasubramaniam-vairamuthu-24-10-12.html | title = எஸ்.பி.பி.யின் அன்பு அணைப்பு | publisher = ''பிகைன்டுவுட்'' | date = 24 Oct 2012, | accessdate = 24 Oct 2012}}</ref>.
 
மேலும், இப்படத்தில் திரு.[[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] அவர்கள் பாடிய ''பழங்கல்லா'' என்ற பாடல் 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 4ம் நாள் [[சூரியன் பண்பலை வானொலி|சூரியன் பண்பலை வானொலியில்]] ஒலிபரப்பு செய்யப்பட்டது<ref>{{cite web|url=http://www.sify.com/movies/irandam-ulagam-audio-launched-in-style-news-tamil-nietQifeeei.html |title='இரண்டாம் உலகம்' இசை வெளியீடு |publisher=சிஃபி |date=2013-08-04 |accessdate=2013-08-07}}</ref>. படத்தின் பாடல்கள் அனைத்தும், 2013ம் ஆண்டு ஆகத்து மாதம் 13ம் நாள் வெளியாயின<ref>[https://www.facebook.com/photo.php?fbid=490337037725356&set=a.363715620387499.88598.363714447054283&type=1&permPage=1 Irandam Ulagam - Tijdlijnfoto's]. Facebook (2013-09-21). Retrieved on 2013-11-16.</ref>. சில காரணங்களால், ஹாரிஸ் ஜெயராஜ் படத்திலிருந்து விலக, படத்தின் பின்னனிபின்னணி இசையை அனிருத் ரவிச்சந்திரன் அமைத்தார்<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Is-all-well-between-Selva-and-Harris/articleshow/22998573.cms Is all well between Selva and Harris? - Times Of India]. Timesofindia.indiatimes.com (2013-09-25). Retrieved on 2013-11-16.</ref>.
 
{{tracklist
வரிசை 92:
}}
 
இத்திரைப்பட பாடலின் தெலுங்கு பதிப்பு (''வர்ணா'') 2013, அக்டோபர் 26ம் தேதி வெளியாகி. இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு பதிப்பின் அனைத்து பாடல்களும்பாடல்களையும் பாடலாசிரியர் சந்திரபோசு எழுதினார்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது