ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
==வரலாறு==
[[கோவலன்]] தனது மனைவி [[கண்ணகி|கண்ணகியுடன்]] மதுரை நகரத்திற்குச் சென்று, கண்ணகியின் கால் சிலம்புகளில் ஒன்றை விற்பதற்காக கடைவீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு அரண்மனைக் காவலர்கள் அவன் பாண்டிய அரசியின் சிலம்புகளைத் திருடியதாகக் கூறி அரசவைக்குக் கூட்டிச்சென்றனர். அரசியின் கால் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லனின் பொய்ச்சாட்சியத்தால் மதுரையின் மன்னனான முதலாம் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
 
இதையறிந்த [[கண்ணகி]] அரசவைக்கு வந்து தனது சிலம்பை உடைத்து தனது சிலம்பில் உள்ள பரல்களும் அரசியின் சிலம்பில் உள்ள பரல்களும் வெவ்வேறு என்பதை காட்டி மன்னன் தவறு செய்ததை சுட்டிக்காட்டினாள். தான் தவறாகத் தீர்ப்பளித்ததை உணர்ந்து வேதனையடைந்த பாண்டிய அரசன், நீதி தவறிய நானே கள்வன் என்று கூறிக்கொண்டே அரசவையிலேயே உயிர் துறந்தான். இதனை கண்ட அரசி கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தாள்.
"https://ta.wikipedia.org/wiki/ஆரியப்படை_கடந்த_நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது