சுந்தரமூர்த்தி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[திருமுனைப்பாடி]] நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ வெள்ளாளர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் [[சடையனார்]], தாயார் [[இசைஞானியார்]]. மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் [[திருமணம்]] ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு [[ஓலைச் சுவடி|ஓலை]]யைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு [[அடிமை]] என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு [[கோயில்|கோயிலுள்]] நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
 
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.<ref>சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை</ref>
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது