திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
==இளமைக் காலம்==
திருநாவுக்கரசருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் ''மருணீக்கியார்''. தற்போதைய தென் ஆர்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு [[சைவம்|சைவ]]க் குடும்பத்தில் வேளாண்வெள்ளாளர் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு [[சமண சமயம்|சமண சமய]]த்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார்
 
திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான [[சூலை நோய்]] ஏற்பட்டது. [[சமண மடம்|சமண மடத்தில்]] செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் திலகவதியிடம் முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் [[தேவாரம்|தேவாரப்]] பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் [[சைவ சமயம்|சைவ]]த்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது