இளநிலைப் பட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இளநிலைப் பட்டம்''' என்பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இளநிலைப் பட்டம்''' என்பது, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தேவைப்படும் இளநிலைப் பட்டப்படிப்பு ஒன்றை வெற்றிகரமாக முடித்தபின் கிடைக்கும் ஒரு கல்வித் தகுதியைக் குறிக்கும் பட்டம் ஆகும். இப்படிப்புக்குத் தேவைப்படும் கால வேறுபாடு இப்பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனங்களையும், பாடத்துறையையும் பொறுத்து அமையும். சில நாடுகளில் சில வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இன்னொரு இளநிலைப் பட்டம் முன்தேவையாக அமைவதால், அவ்வாறு பெறப்படும் பட்டங்கள் ஒரு இரண்டாவது பட்டமாகவும் அமைவது உண்டு. [[சட்ட இளவல்]], [[கல்வியியல் இளவல்]], [[இசையியல் இளவல்]], [[மெய்யியல் இளவல்]], [[புனித இறையியல் இளவல்]] போன்ற பட்டங்கள் சில நாடுகளில் இரண்டாம் பட்டங்களாகவே வழங்கப்படுகின்றன.
 
ஐக்கிய இராச்சியத்தின் கல்வி முறைமையிலும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட பிற நாடுகள் சிலவற்றின் கல்வி முறைமையிலும், இளநிலைப் பட்டத்தில், சாதாரண பட்டம், சிறப்புப் பட்டம் என இரண்டு வகைகள் உள்ளன. சிறப்புப் பட்டம் பெறுபவர்கள் தமது பெயருக்குப் பின் பட்டத்தைக் குறிப்பிடும்போது அடைப்புக் குறிக்குள் (சிறப்பு) எனக் குறிப்பிடுவது உண்டு. சிறப்புப் பட்டம் பெறுவதற்குச் சாதாரண பட்டத்தை விட உயர்வான கல்வித் தரம் தேவைப்படுகிறது. சில பல்கலைக்கழகங்களில், சிறப்புப் பட்டம் பெறுவதற்கு கூடுதலாக ஓராண்டு கற்க வேண்டும்.
 
[[பகுப்பு: கல்வித் தகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளநிலைப்_பட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது