"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

<blockquote>இந்தியின் உயர்வுநிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல்மொழி இந்தியா ஆங்கிலமா என்ற முடிவு மற்றவர்களைவிட அவர்களையே கூடுதலாக பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல்மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள்.<ref name="sundaresan">{{cite book | first= D| last=Sundaresan| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Language for state administration: a historical account| publisher=Jothi Lakshmi Publishers| location=Chennai | id= | pages=2| url=http://books.google.com/books?id=k84bAQAAIAAJ}}</ref></blockquote>
 
இந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் [[ஜி. டி. நாயுடு]], [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜ செட்டியார்]] போன்றோர் நிதியுதவி அளித்தனர்.<ref name="Hardgrave"/> 17 சனவரி அன்று, [[திருச்சி]]யில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி ([[சுதந்திராக் கட்சி]]), [[வி. ஆர். நெடுஞ்செழியன்]] (திமுக), [[பி. டி. ராஜன்]] (நீதிக்கட்சி), [[ஜி. டி. நாயுடு]], [[கருமுத்து தியாகராசர்|கருமுத்து தியாகராஜ செட்டியார்]], [[சி. பா. ஆதித்தனார்]] ([[நாம் தமிழர் கட்சி(ஆதித்தனார்)|நாம் தமிழர்]]), [[காயிதே மில்லத்|முகமது இஸ்மாயில்]] ([[அகில இந்திய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]]) ஆகியோர் பங்கு கொண்டனர்.<ref name="annamalai1"/><ref name="karat">{{cite book | first= Prakash| last=Karat| authorlink= Prakash Karat| coauthors= | origyear=| year=1973| title=Language and nationality politics in India| publisher=Orient Longman| location= | id= | pages=92| url=http://books.google.com/books?id=EbG2AAAAIAAJ}}</ref> இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் "கிழித்து அரபிக்கடலில் போட வேண்டும்" என்று முழங்கினார்.<ref name="indiatoday"/> 16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர்வந்த குடியரசு நாளைத் துக்கநாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் [[லால் பகதூர் சாஸ்திரி]]க்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒருவாரம் தள்ளிப்போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது.
 
==="துக்கநாள் "===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1809623" இருந்து மீள்விக்கப்பட்டது