"திமிங்கிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (*திருத்தம்*)
}}
 
'''திமிங்கிலம்''' (திமிங்கலம், ''Whale'') [[நீர்|நீரில்]] வாழும் [[பாலூட்டி]] இனத்தைச் சேர்ந்த ஒரு [[விலங்கு]] ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை [[நுரையீரல்]] மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
 
== உடலமைப்பு ==
திமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக [[மீன்]] போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் [[தோல்|தோலின்]] உட்புறம் ஒரு [[கொழுப்பு]] அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் [[வெப்பம்|வெப்பத்தைத்]] தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் [[மனிதன்|மனிதனைப்]] போன்றே [[இதயம்|இதயத்தில்]] நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். [[இசுப்பெர்ம் திமிங்கலம்]] எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்.
இவற்றின் [[உடல்]] அளவிடற்கரிய [[கடல்]] [[நீர்|நீரின்]] அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய [[ஆற்றல்]] பெற்றது. ஆழக் கடலின் [[ஒளி|வெளிச்சம்]] அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் [[எதிரொலி]] உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கிறனகொள்கின்றன.
 
== தோற்றம் ==
[[Image:Ambulocetus BW.jpg|thumb|right|220px|''[[Ambulocetus]] natans'' – ஆரம்ப கால திமிங்கிலம்]]
திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை [[நீர்]]-[[நிலம்]] இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும் , பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.
 
== சுவாசித்தல் ==
உண்மையில் திமிங்கிலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட [[பாலூட்டிகள்]] என்ற விலங்கினங்களாகும். திமிங்கிலங்கள் [[நீர்|நீரில்]] வசிப்பினும் அவை மற்ற [[மீன்|மீனினங்களை]] போல செவுள்களால் சுவாசிப்பதிலைசுவாசிப்பதில்லை. அவை நம்மைபோல் [[நுரையீரல்|நுரையீரலைக்]] கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் [[மூக்கு]] வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
திமிங்கிலங்கலங்களின்திமிங்கிலங்களின் [[நுரையீரல்]] மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு [[காற்று|காற்றை]], தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது [[மூக்கு]] வழியாக [[நீர்]] உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன.
திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கிலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதயத் துடிப்பு மற்றும் [[ஒட்சிசன்]] உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள [[ஒட்சிசன்]] மறுமுறை காற்றை உள்ளிழுக்கும் வரை தாங்குகிறது.
இவ்வாறு ஒருமுறை காற்றை [[நுரையீரல்|நுரையீரலில்]] நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித [[ஒட்சிசன்|ஒட்சிசனை]] எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.
* 1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. [[நோர்வே]], [[கிறீன்லாந்து]], [[ஜப்பான்]] ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.
* 'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி [[நோர்வே]], [[யப்பான்]] நாடுகள் திமிங்கில வேட்டையை தொடர்கின்றன.
 
== மேலும் காண்க ==
* [[பலூகா (திமிங்கிலம்)]]
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1810921" இருந்து மீள்விக்கப்பட்டது