ஏயர்கோன் கலிக்காம நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தசகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = ஏயர்கோன் கலிக்காம நாயனார்
| படிமம் =
| படிமத் தலைப்பு =
| படிம_அளவு =
| குலம் = வேளாளர்
| காலம் =
| பூசை_நாள் = ஆனி ரேவதி
| அவதாரத்_தலம் =
| முக்தித்_தலம் =
| சிறப்பு =
}}
 
'''ஏயர்கோன் கலிக்காம நாயனார்''' 63 நாயன்மார்களில் ஒருவர். "ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" என்று [[திருத்தொண்டத் தொகை]] கூறுகிறது. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபத்தியிலும் அடியார் பக்த்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் [[மானக்கஞ்சாறர்|மானக்கஞ்சாறனாரது]] மகளைத் திருமணம் செய்தவர். '''ஏயர்கோன் கலிக்காமர்''' திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருபணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித்தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்கனம் வாழும் நாளில் [[சுந்தரமூர்த்தி சுவாமிகள்]] [[சிவபெருமான்|சிவபெருமானை]] பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்யுற்று, ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும்பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றானே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆதிய தேவரெல்லாம் தொழும் தேவாதேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தன்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது [[சிவபெருமான்]] திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி "உன்னை வருத்தும் சூலை [[வன்றொண்டன்]] தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் வழிவழி அடியனான என் வருதத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் எந்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற் சூலை சென்று நீ தீர்ப்பாய்' எனப் பணித்தருளினார். நம்பியாரூரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற் இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது