பாக்கித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 124:
 
தற்போது பாக்கித்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முசுலிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசெடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துர்ரானி பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கித்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கித்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] உதயமானது.
 
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான் விளங்குகின்றது. A [[Regional power|regional]] and [[middle power]], உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கித்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணுவாயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக<ref name="Buzan2004">{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/books?id=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}</ref><ref name=Solomon>{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}}</ref> விளங்குகின்றது; முசுலிம் உலகில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
 
விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றன. [[மிகுமக்கள்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மை பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.<ref>[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report]</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொதுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சு குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இசுலாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.<ref>[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]</ref>
 
==பெயர்க்காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/பாக்கித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது