உற்சவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உற்சவர்''' என்பது இந்து கோவில்களில் உற்சவம் எனப்படும் விழாக் காலங்களில் கோவிலையோ அல்லது கோவிலுக்கு அருகிலுள்ள வீதிகளையோ வலம் வருவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தந்தக் கோயில்களின் இறைவனின் உலோகச் சிலையாகும். பொதுவாக உற்சவர் சிலைகள் செம்பு, ஐம்பொன் அல்லது தங்கத்தில் செய்யப்படுகின்றன.
 
==உற்சவ மண்டபம்==
பெரிய கோவில்களில் உற்சவருக்கென தனி மண்டபம் அமைத்து அதில் உற்சவரை வைத்திருக்கின்றார்கள். அம்மண்டபம் உற்சவ மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. தனித்த மண்டபம் இல்லாத கோவில்களில் உற்சவர் சிலை முலவருக்குமூலவருக்கு அருகிலேயே வைக்கப்படுகிறது.
 
==சிறப்பு==
சில கோவில்களில் முலவருக்குமூலவருக்கு அபிசேகங்கள் செய்ய இயலாத நிலையில் உற்சவருக்கு மட்டுமே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன. உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மூலவர் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், உற்சவருக்கே அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.
 
உற்சவரை மூலவருக்கு பிரதிநீதியாக விழாக்களில் கொண்டாடுகிறார்கள். சில கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/உற்சவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது