பாரத ஸ்டேட் வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டில் ஆறு இணைவங்கிகள் செயல்படுகின்றன;இவையனைத்தும் சேர்ந்து ஸ்டேட்வங்கி குழுமம் ஆகின்றன. இவை அனைத்துமே ஒரே சின்னமாக நீலநிற சாவித்துளையை கொண்டுள்ளன.பெயரிலும் ஒரே சீராக ஸ்டேட் வங்கி என்ற ஒட்டைக் கொண்டுள்ளன. முன்னாள் சமத்தானங்களின் அரசு வங்கிகள் ஏழும் அக்டோபர் 1959 மற்றும் மே 1960 ஆண்டுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்டப்போது இவை பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளாயின. முதல் [[ஐந்தாண்டுத் திட்டம்|ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில்]] கிராம வளர்ச்சிக்காக கிராமங்களில் வங்கி பரவலை கூட்ட இவ்வாறு செய்யப்பட்டது.
 
மாறிவரும் பொருளியல் மாற்றங்களுக்கொப்ப இந்த இணைவங்கிகளை முதன்மைவங்கியடன் இணைத்து மிகப்பெரும் வங்கியை உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகத்து 13,2008 அன்று [[ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா|சௌராஷ்டிர ஸ்டேட் வங்கி]] பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்தது.
 
சூன் 19,2009 அன்று ஸ்டேட் வங்கியின் ஆட்சிக்குழு [[இந்தூர் ஸ்டேட் வங்கி]]யை தன்னுடன் இணைத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 98.3% பங்கும் பிறருக்கு 1.77% பங்கும் உள்ளது. இவர்கள் இந்த வங்கி அரசுடைமையாவதற்கு முன்னமே இந்தப் பங்குகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். இந்த இணைப்பின் பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் 11,448 கிளைகளுடன் 470 கிளைகள் கூடுதலாகும். இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மார்ச் 2009 கணக்கின்படி ₹ 998,119 கோடிகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாரத_ஸ்டேட்_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது