வெளிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வெளிக்கோள்கள்''' (outer planets) என்பன, சூரிய மண்டலத்தில், [[சிறுகோள் பட்டை]]க்கு வெளியே காணப்படும் கோள்கள் ஆகும். எனவே, இச்சொல் [[வளிமப் பெருங்கோள்]]களைக் குறிக்கிறது. இவை, [[வியாழன்]], [[சனி]], [[யுரேனசு]], [[நெப்டியூன்]] என்னும் நான்கும் ஆகும். 1930ல் முதன் முதலாக அறியப்பட்டதில் இருந்து, 2006ல் அது ஒரு [[குறுங்கோள்]] என வகைப்படுத்தப்படும் வரை [[புளூட்டோ]]வும் ஒரு வெளிக்கோள் எனவே கருதப்பட்டு வந்தது.
 
எல்லா வெளிக்கோள்களும் வளையங்களைக் கொண்டவை எனினும், சனிக் கோளுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியக்கூடிய வளையம் உண்டு. பல [[துணைக்கோள்]]கள் இருப்பது வெளிக்கோள்களுக்குப் பொதுவாக அமைந்த இன்னொரு அம்சம். வியாழனின் [[கனிமீடு]], சனியின் [[டைட்டன்]] ஆகிய இரண்டு துணைக்கோள்களும் புதன் கோளிலும் பெரியவை. இவையும், [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]], [[கலிஸ்டோ]], [[யூரோப்பா (துணைக்கோள்)|யூரோப்பா]], [[டிரைட்டன் (துணைக்கோள்)|டிரைட்டன்]] ஆகிய துணைக்கோள்கள் புளோட்டோ, [[எரிசுஏரிசு (குறுங்கோள்)|எரிசுஏரிசு]] ஆகியவற்றைவிடப் பெரியவை.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது