சிமோன் த பொவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: af:Simone de Beauvoir is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 18:
 
== இளமைக்காலம் ==
''சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்'' என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு [[சட்ட வல்லுனர்|சட்ட வல்லுனரும்]], [[நடிகர்|நடிகருமான]] ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் [[பாரிஸ்]] நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர், மியூஸ் வங்கியின் தலவராகதலைவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் [[வறுமை]] நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.
 
இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் "ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இளஇளம் வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு [[நாடகம்]], [[இலக்கியம்]] போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள் [[வறுமை]]யில் இருந்து மீள முடியும் என அவர் நம்பினார்.
 
15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக [[பாரிஸ் பல்கலைக்கழகம்]] சென்றார். அங்கே அவர் ஜான் பவுல் சாட்டர் உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சிமோன்_த_பொவார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது