உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
உரையாடல் எந்த சட்ட முறைகளையும் பின் பற்றுவதில்லை என்று சொன்ன போதிலும், நடத்தை நெறி கருதி, அங்கங்கே உள்ள பண்பாட்டு முறைகளைப் பின் பற்றியே ஆக வேண்டி இருக்கும். உரையாடல் ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதால், அது தொடர்பான சட்ட முறைகள் இன்றியமையாதவையாக ஆகின்றன. இந்த சட்ட முறைகளை மீறும் போது, உரையாடல் தொடர முடியாமற் போகும். சட்ட முறைகளை மீறாமல் இருக்கும் வரை, உரையாடல் தொடர்ந்து நடக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கலாம். ஒரு சில நேரங்களில், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள, உரையாடலே உகமமான பரிமாற்றக் கருவியாகும். ஆனால், உரையாடலில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பேசுவது அனைத்தும் நினைவில் இருந்து மறைந்து கொண்டே போய்விடும்; அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பார்ப்பது கடினம். இது போன்ற தேவைகள் ஏதும் இருப்பின், எழுத்து வழி உரையாடல் செய்வது நல்லது. கருத்துப் பரிமாற்றம் விரைவாக நடக்க வேண்டுமாயின், பேச்சு வழி உரையாடல் செய்வது சரியாக இருக்கும்.
 
== வகைப்பாடு (Classification) ==
 
உரையாடலைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்.
=== கதைத்தல் (Discussion) ===
கதைத்தல் என்பது உரையாடலில் ஒரு பகுதி ஆகும். கதைத்தலின் போதுகதைத்தலின்போது, முரண்பாடுகள் ஏதேனும் தோன்றுமாயின், உடனே பேசப்படும் கருப்பொருள் (subject) மாறுகின்றது. எடுத்துக் கட்டாக, ஒரு கதைத்தலில் கடவுள் நம்பிக்கை என்பது கருப்பொருளாக இருந்தால், ஒருவர் தான் கூறுவதைத்தான் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது இல்லை.<ref>Conklin, Mary Greer. 1912.''Conversation: What to Say and How to Say It," pp. 35 – 60 New York and London: Funk & Wagnalls Company.</ref> அப்படிச் செய்தால் அது கதைத்தல் ஆகாது.
 
=== கதைத்தலின் கருப்பொருள் (Subject) ===
கருப்பொருளை வைத்துக் கதைத்தலைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.:
* தற்சார்பு கருப்பொருள் (subjective idea)
கதைத்தலில் ஒருவர் தம்முடைய சொந்த கருத்தைக் கருப்பொருளாக முன் வைப்பார். இதனால், அவருக்கு அந்தப் பொருளைப் பற்றிப் புரிதலும் தெளிவும் பிறக்க வாய்ப்பு இருக்கின்றது.
* மெய்ச்சார்பான உண்மைக் கருப்பொருள் (objective fact)
இது போன்ற கருப்பொருட்கள் கதைத்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வலிமை பெற்றது.
* மற்றவர்களைப் பற்றிய கருப்பொருள்
இது மற்றவர்களைப் பற்றி (குறிப்பாக கதைத்தலில் பங்கு கொள்ள வர இயலாதவர்களைப் பற்றி) பேசுவதைக் குறிக்கும். அவர்களைப் பற்றிய குறை நிறைகளை அவர்கள் இல்லாது போது உரையாடுவது ( [[:en:Criticism criticism|critical]]), வெட்டிப் பேச்சு (‘’கிசு கிசு’’, [[:en:Gossip|gossip]]) போன்றவை இதில் அடங்கும்.
* தன்னைப் பற்றிய கருப்பொருள்
இதில் ஒருவர் தன்னுடைய நிறை குறைகளைக் கருப்பொருளாக வைத்துக் கதைத்தலைத் தொடங்குவார். மற்றவர்கள் கவனம் தன் மீது திரும்ப வேண்டும் [[:en:Attention-seeking|attention-seeking]] என்ற உள்நோக்கத்தோடும் ([[உள்நோக்கம்|உள்நோக்கத்தோடும்]], [[:en:Intentio|intention]]) இதைச் செய்யலாம்.
 
கதைத்தல் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல கருப்பொருட்களைக் கொண்டதாக இருக்கின்றது. அதனால், ஒரு கதைத்தல் எந்த பிரிவைச் சார்ந்ததென்று கூற முடியாது.
 
== உரையாடலின் கூறுகள் (Aspects o f conversation ) ==
"https://ta.wikipedia.org/wiki/உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது