சு. தியடோர் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
 
==திரைப்பட வரலாற்றாளர்==
[[1972]]ல் பாஸ்கரன் திரைப்பட வரலாற்றைப் பற்றிய ”சிவ தாண்டவம்” என்ற தனது முதல் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். [[வங்காள மொழி]] இயக்குனர் சித்தானந்த தாஸ்குப்தாவின் ''டான்ஸ் ஆஃப் சிவா'' என்ற ஆவணப்படத்தைப் பற்றியது அந்த கட்டுரை. பின் அவரது நண்பரும் [[அமெரிக்கா|அமெரிக்க]] வரலாற்று ஆய்வாளருமான சார்லஸ் ஏ. ரயர்சன் அவரைத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டினார். பாஸ்கரன், தமிழ்நாடு வரலாற்றுக் கழகம் கொடுத்த நல்கையின் துணையுடன் இரண்டாண்டுகள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, 1974ல் தன் ஆய்வைத் தொடங்கினார். திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள 1975ல் திரைப்பட பகுப்பாய்வு வகுப்பொன்றில் சேர்ந்தார். அங்கு அவருக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர் பி.கே. நாயர் அவரை [[புணேபுனே]]யிலுள்ள தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில் நியமித்தார். இரண்டாண்டுகள் அங்கு பல பழைய திரைப்படங்களைப் பார்த்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1976ல் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பியவுடன், [[கல்கத்தா]]வுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்கத்தா திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.<ref name="A"/><ref name="B">Muthukumaraswamy, P.314-5</ref>
 
இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு [[அலிகார்|அலிகாரில்]] நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் ''தி மெசேஜ் பியரர்ஸ்'' (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ஆட்சிக்குப்]] பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று அப்போது பரவலாக நிலவிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் இப்புத்தகம் அமைந்திருந்தது. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய இயக்கத்தில்]] தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல், "பாம்பின் கண்" என்று பொருள்படும், ''தி ஐ ஆஃப் தி செர்பன்ட்'' (The Eye of the Serpent) 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தங்கத் தாமரை]] விருது வழங்கப்பட்டது.<ref name="A"/><ref name="B"/>
"https://ta.wikipedia.org/wiki/சு._தியடோர்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது