"தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|he}} → (3)
சி (clean up, replaced: {{Link FA|he}} → (3))
'''தேன்''' ஓர் [[இனிப்பு|இனிய]] [[உணவு]]ப்பொருள் ஆகும். [[மருத்துவம்|மருத்துவ]] குணமும் கொண்டது. [[பூ]]க்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான [[நீர்மம்|நீர்மத்தில்]] (திரவத்தில்) இருந்து [[தேனீ]]க்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களை]] (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% [[ஈரப்பசை|ஈரத்தன்மை]] உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது.
 
தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.
 
தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும்.
 
உலகில் தேன் வழி நிகழும் [[பொருளியல்]] ஈட்டம் [[பில்லியன்]] டாலர் கணக்கில் இருக்கும். [[அமெரிக்கா]]வில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 [[மில்லியன்]] [[கிலோ கிராம்]] தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு) <ref>World book Encyclopedia, 1985 Edition</ref>, [[கனடா]]வில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. <ref>[http://www.honeycouncil.ca/users/folder.asp?FolderID=4809 கனடிய தேன் சேகரிப்புப் புள்ளியியல் குறிப்பு - மாநில, ஆண்டு வாரியாக]</ref>
 
== பயன்கள் ==
{{Infobox nutritional value|name=தேன்|kJ=1272|protein=0.3 g|fat=0 g|carbs=82.4 g|sugars=82.12 g|fiber=0.2 g|sodium_mg=4|potassium_mg=52|vitC_mg=0.5|riboflowin_mg=0.038|niacin_mg=0.121|pantothenic_mg=0.068|folate_ug=2|iron_mg=0.42|magnesium_mg=2|phosphorus_mg=4|zinc_mg=0.22|calcium_mg=6|vitB6_mg=0.024|water=17.10 g|source_usda=1|note=Shown is for 100 g, roughly 5 tbsp.}}
 
தேன் - ஆய்வும் பகுதிப்பொருட்களும் :-
 
* [[பிரக்டோச்]]: 38.2%
* [[சர்க்கரை]]: 1.5%
* [[சாம்பல்]]: 0.2%
* மற்றவை : 3.2%
 
ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.<ref name = "மருத்துவப்பயன்">{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=அறுவை‌‌ ‌சி‌கி‌ச்சை காய‌ங்களு‌க்கு அருமரு‌ந்தாகு‌ம் தே‌ன் : ஆ‌ய்வு! |url=http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0710/19/1071019052_1.htm |work= |publisher= Webdunia|date=19 அக்டோபர் 2007 |accessdate=2007-12-31 }}</ref>
 
== தேன் பாதுகாப்பு ==
 
தேனின் தனிப்பட்ட அமைப்பு மற்றும் அதன் இரசாயன பண்புகள், தேனை நீண்ட காலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீண்ட கால சேமிப்பிற்குப் பிறகும் தேன் எளிதில் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கச் செய்கிறது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாகக் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாகும். தூயநிலையில் தேன் போதிய உயர் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டு நொதித்தலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்பொழுது , அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப் படிகமாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம்.
 
 
== தேன் தரப்படுத்துதல்:- ==
அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது. ( யுஎஸ்டிஏ " இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது.). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு.
 
=== தேன் தர அளவுகோல்:- ===
தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது.
 
குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.
 
=== நச்சு தேன்:- ===
 
அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது.
 
 
 
==தேன்-உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் நாடுகள்==
 
[[மெக்சிகோ]] உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும்.<ref>[http://wherefoodcomesfrom.com/Article.aspx?ArticleID=6380 Where Honey Comes From]. Wherefoodcomesfrom.com (2012-11-09). Retrieved on 2013-08-02.</ref> மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு [[யுகாட்டின் தீபகற்பம்]] ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
 
 
 
 
 
 
== குறிப்புகள் ==
[[பகுப்பு:உணவுப் பொருட்கள்]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|he}}
{{Link FA|hr}}
{{Link FA|ja}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1826751" இருந்து மீள்விக்கப்பட்டது