உருசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புக்கள் திருத்தம்
சி clean up, replaced: {{Link FA|af}} → (5)
வரிசை 83:
 
'''உருசியா''' (''Russia'') அல்லது '''இரசியா''' என்பது வடக்கு [[யூரேசியா]]வில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும்.<ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> இந்நாட்டின் முறைப்படியான பெயர் '''உருசியக் கூட்டமைப்பு''' என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (''Rossiyskaya Federatsiya'' அல்லது ''ரசீஸ்க்கய ஃபெதராத்சியா'') அல்லது சுருக்கமாக '''உருசியா''' (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: ''Rossiya'' அல்லது ''Rossija'') என அழைக்கப்படுகிறது. [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால்]], உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான [[கனடா]]வின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட [[ஆசியா]] முழுவதையும் மற்றும் 40% [[ஐரோப்பா]] பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு [[காடு|காட்டு]] ஒதுக்கங்களைக் (8,087,900 ச.கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.<ref name=loc>{{cite web|last=Library of Congress|title=Topography and drainage|url=http://countrystudies.us/russia/23.htm|accessdate=26 December 2007}}</ref> உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன்<ref>{{cite web|url=http://www.unesco.ru/en/?module=pages&action=view&id=1|title=Commission of the Russian Federation for UNESCO: Panorama of Russia|publisher=Unesco.ru|accessdate=29 October 2010}}</ref> உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.<ref name=IEA-Oil>[http://omrpublic.iea.org/omrarchive/18jan12sup.pdf International Energy Agency – Oil Market Report 18 January 2012]. Retrieved 20 February 2012.</ref><ref name=cia-gas>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2180rank.html Country Comparison :: Natural gas – production]. CIA World Factbook. Retrieved 17 February 2012.</ref> உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): [[நார்வே]], [[பின்லாந்து]], [[எஸ்டோனியா]], [[லத்வியா]], [[லித்துவானியா]], [[போலந்து]], [[பெலாரஸ்]], [[உக்ரைன்]], [[ஜார்ஜியா]], [[அசர்பைஜான்]], [[கசகஸ்தான்]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[மங்கோலியா]] மற்றும் [[வட கொரியா]].
 
உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது.<ref name=autogenerated1>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia/38597/The-Indo-European-group?anchor=ref422350|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது.<ref name=Curtis/> இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற [[உருசியப் பண்பாடு|உருசியப் பண்பாட்டு]] வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.<ref name=Curtis>{{cite web|last=Excerpted from Glenn E. Curtis (ed.)|title=Russia: A Country Study: Kievan Rus' and Mongol Periods|publisher=Washington, DC: Federal Research Division of the Library of Congress|year=1998|url=http://www.shsu.edu/~his_ncp/Kievan.html|accessdate=20 July 2007}}</ref> சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர்.<ref>''The Mongol empire: its rise and legacy'', By [[Michael Prawdin]], Gérard Chaliand, (2005) page 512-550</ref> பின்னர், [[மாசுக்கோ பெரும் டச்சி]] (Grand Duchy of Moscow) படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் [[போலந்து]] முதல் வட அமெரிக்காவில் உள்ள [[அலாசுக்கா]] வரை பரந்து இருந்தது.<ref>{{cite journal|author=Rein Taagepera|authorlink=Rein Taagepera|title=Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia|journal=[[International Studies Quarterly]]|volume=41|issue=3|pages=475–504|year= 1997|doi=10.1111/0020-8833.00053}}</ref><ref>Peter Turchin, Thomas D. Hall and Jonathan M. Adams, "[http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf East-West Orientation of Historical Empires]", ''Journal of World-Systems Research'' Vol. 12 (no. 2), pp. 219–229 (2006).</ref>
 
உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், [[சோவியத் ஒன்றியம்]] மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது.<ref>{{cite book|author1=Jonathan R. Adelman|author2=Cristann Lea Gibson|title=Contemporary Soviet Military Affairs: The Legacy of World War II|url=http://books.google.com/books?id=XXcVAAAAIAAJ&pg=PA4+|accessdate=15 June 2012|date=1 July 1989|publisher=Unwin Hyman|isbn=978-0-04-445031-3|page=4}}</ref> [[சோவியத் ஒன்றியம்]] உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு [[வல்லரசு]]களில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.<ref>{{Cite book|author=Weinberg, G.L.|title=A World at Arms: A Global History of World War II|isbn=0-521-55879-4|publisher=Cambridge University Press|page=264|year=1995}}</ref><ref>Rozhnov, Konstantin, [http://news.bbc.co.uk/2/hi/europe/4508901.stm Who won World War II?]. BBC.</ref> சோவியத் ஒன்றியக் காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
 
உருசியப் பொருளாதாரம் [[பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யின் அடிப்படையில் ஒன்பதாவது பெரியதாகவும், [[வாங்கும் திறன் சமநிலை]]யின் அடிப்படையில் ஆறாவது பெரியதாகவும் உள்ளது. இதன் படைத்துறைக்கான பெயரளவு வரவு செலவு உலகின் மூன்றாவது பெரிதாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்திகளுள் ஒன்று. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றான உருசியா உலகின் மிகப் பெரிய பேரழிவு ஆயுதச் சேமிப்பையும் கொண்டுள்ளது. உருசியா [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை]]யின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக உள்ளதுடன், [[ஜி8]], [[ஜி20]], [[ஐரோப்பிய அவை]], [[ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு]], [[சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு]], [[யூரேசிய பொருளாதாரச் சமூகம்]], [[ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு]], [[உலக வணிக அமைப்பு]] ஆகியவற்றிலும் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
வரிசை 135:
மொங்கோலிய-தாத்தார்களின் தொடர் தாக்குதல்களாலும், பனிக்காலத் தொடக்கத்தினால், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களாலும் துன்பப்பட்டது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, பிளேக் நோய் ரசியாவையும் பாதித்தது. 1350இலிருந்து 1490 வரை ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசியாவின் பகுதிகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறைந்த சனத்தொகை அடர்த்தி, சிறந்த சுகாதார நடைமுறைகள் (பரவலான, ஈர ஆவிக் குளியல் நடைமுறை) காரணமாக,<ref name=banya>[http://sauna-banya.ru/ist.html The history of banya and sauna] {{ru icon}}</ref> பிளேக் நோயினால் ஏற்பட்ட இழப்புகள், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது போன்று பெரியளவில் ஏற்படவில்லை. 1500 ஆகும்போது ரசியாவின் சனத்தொகை பிளேக் நோய்க்கு முன்னரான அளவுக்கு உயர்ந்தது.<ref>"''[http://books.google.com/books?id=yw3HmjRvVQMC&pg=PA62 Black Death]''". Joseph Patrick Byrne (2004). p. 62. ISBN 0-313-32492-1</ref>
 
மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநடத்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும்.
 
மூன்றாம் இவான்(''தி கிரேட்'') இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான்.<ref>{{cite web|author=May, T.|title=Khanate of the Golden Horde|url=http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archiveurl=http://web.archive.org/web/20080607055652/http://www.accd.edu/sac/history/keller/Mongols/states3.html|archivedate=7 June 2008|accessdate=27 December 2007}}</ref> 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசின்]] ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான்.
வரிசை 206:
 
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
 
 
 
இரண்டாம் உலகப்போரின் 1941-45 காலப்பகுதி ரசியாவில் ''பெரும் நாட்டுப்பற்றுப் போர்'' எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6&nbsp;மில்லியன் ராணுவத்தினரும், 15.9&nbsp;மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite book|author=Erlikman, V.|title=Poteri narodonaseleniia v XX veke : spravochnik|year=2004|id=Note: Estimates for Soviet World War II casualties vary between sources|isbn=5-93165-107-1|publisher=Russkai︠a︡ panorama|location=Moskva}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.<ref>Geoffrey A. Hosking (2006). "''[http://books.google.com/books?id=CDMVMqDvp4QC&pg=PA242 Rulers and victims: the Russians in the Soviet Union]''". Harvard University Press. p. 242. ISBN 0-674-02178-9</ref> சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது.<ref>{{cite web|title=Reconstruction and Cold War|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/12.htm|accessdate=27 December 2007}}</ref> ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.
வரி 274 ⟶ 272:
[[பகுப்பு:இரசியா| ]]
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|af}}
{{Link FA|ar}}
{{Link FA|hr}}
{{Link FA|id}}
{{Link FA|vi}}
"https://ta.wikipedia.org/wiki/உருசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது