ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|af}} → (10)
வரிசை 90:
== வரலாறு ==
===வரலாற்றுக்கு முந்தையக் காலம்===
1907இல் கண்டெடுக்கப்பட்ட ''மாயுவர் 1'' தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது.<ref>{{cite web|url=http://www.pnas.org/content/107/46/19726.full|title=Radiometric dating of the type-site for Homo heidelbergensis at Mauer, Germany|work=pnas.org|publisher=[[த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு]]|date=27 August 2010|accessdate=27 August 2010}}</ref> உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் ''இசோனின்கென்'' என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.<ref>{{cite web|url=http://archive.archaeology.org/9705/newsbriefs/spears.html|title=World's Oldest Spears|work=archive.archaeology.org|publisher= |date=3 May 1997|accessdate=27 August 2010}}</ref> செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் ''தால்'' எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக [[நியண்டர்தால் மனிதன்]] என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு,பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். <ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/science-environment-18196349|title=Earliest music instruments found|work=BBC|publisher= |date=25 May 2012|accessdate=25 May 2012}}</ref> 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான [[சிங்க மனிதன்]] உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.theartnewspaper.com/articles/Ice-Age-iLion-Mani-is-worlds-earliest-figurative-sculpture/28595|title=Ice Age Lion Man is world’s earliest figurative sculpture|work=theartnewspaper.com|publisher=The Art Newspaper|date=31 January 2013|accessdate=31 January 2013}}</ref>
=== ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் ===
 
வரிசை 114:
[[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியனின்]] வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய [[வியன்னா மாநாடு]] செருமானியக் கூட்டமைப்பை (''Deutscher Bund'') நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி [[கிளெமென்சு வொன் மெட்டர்னிக்|மெட்டர்னிக்கின்]] அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ''[[சோல்பெரைன்]]'' என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.<ref>{{cite journal |last=Henderson |first=W. O. |title=The Zollverein |journal=History |date=January 1934 |volume=19 |issue=73 |pages=1–19 |doi=10.1111/j.1468-229X.1934.tb01791.x}}</ref>[[பிரெஞ்சுப் புரட்சி]]யின் [[தேசியவாதம்|தேசிய]] முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த [[ஆம்பாக் விழா]] [[செருமன் வினா|செருமன் ஒற்றுமை]]க்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். [[1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்|ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக]], செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் [[செருமானிய அரசுகளில் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகள்|1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத்]] தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.<ref name="state"/>
 
பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|பிஸ்மார்க்கை]] புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது [[வெர்சாய் அரண்மனை]]யில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின.
 
[[File:Deutsches Reich 1871-1918.png|left|thumb|[[செருமானியப் பேரரசு]] (1871–1918), ஆதிக்கம் மிக்க [[பிரசியா]] நீலத்தில்]]
வரிசை 129:
[[செருமன் புரட்சி, 1918–1919|செருமன் புரட்சி]]யின் துவக்கத்தில் செருமனி தன்னை [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி [[பொதுவுடைமை]] பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான [[வைமார் அரசியலமைப்புச் சட்டம்|வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை]] நடைமுறைப்படுத்தினார்.<ref>Fulbrook 1991, pp. 156–160.</ref> இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.<ref>Williamson (2005). ''Germany since 1815: A Nation Forged and Renewed''. Palgrave Macmillan, pp. 186-204.</ref> இது 1929இல் ஏற்பட்ட [[பெரும் பொருளியல் வீழ்ச்சி]]யால் சீரழிந்தது.
[[File:Bundesarchiv Bild 183-S33882, Adolf Hitler retouched.jpg|thumb|upright|left|[[நாட்சி ஜெர்மனி]]யின் [[இட்லர்]], ''[[பியூரர்]]''<ref>{{cite book|last=Schmitz-Berning|first=Cornelia|title=Vokabular des Nationalsozialismus|chapter=Führer, Der Führer|location=Berlin|year=2000|origyear=1998|publisher=Walter de Gruyter|pages=240–245|url=http://books.google.com/books?id=9jmWOMks6bkC&pg=PA243#v=onepage&q&f=false|isbn=3-11-016888-X}} {{cite web|url = http://www.bpb.de/geschichte/nationalsozialismus/dossier-nationalsozialismus/39548/gleichschaltung?p=5 |title = Beginn der nationalsozialistischen Herrschaft (Teil 2) |first = Hans-Ulrich |last = Thamer |year = 2003 |work = Nationalsozialismus I |publisher = Federal Agency for Civic Education |location = Bonn |language = German |accessdate =5 April 2012 |quote = President [[Paul von Hindenburg|von Hindenburg]] died on 2 August 1934. The day before, the cabinet had approved a submission making Hitler his successor. The office of the president was to be dissolved and united with that of the chancellor under the name "Führer und Reichskanzler". However, this was in breach of the Enabling Act (shortened & paraphrased).}}</ref>]]
கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் [[நாட்சி கட்சி]] 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது.
 
1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர்.<ref name="chronicle">{{cite web|url=http://www.holocaustchronicle.org/StaticPages/50.html|title=The Holocaust Chronicle PROLOGUE: Roots of the Holocaust|publisher=|accessdate=28 September 2014}}</ref> அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் [[நாட்சி கட்சி]] 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் [[இட்லர்|இட்லரை]] அரசுத்தலைவராக நியமித்தார்.<ref>Fulbrook 1991, pp. 155–158, 172–177.</ref> பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட ''இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணை''யின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் [[நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள்|செறிவக முகாம்களை]] பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்திலிருந்து]] விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார்.<ref>{{cite web |url= http://www.dhm.de/lemo/html/nazi/wirtschaft/index.html |title=Industrie und Wirtschaft |accessdate=25 March 2011 |publisher=Deutsches Historisches Museum |language=German}}</ref> பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார்.
 
ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது.<ref>Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 317</ref> 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது <ref>Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 230</ref> 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் உடன்பாட்டிலிருந்து]] விலகிக் கொண்டது; [[யூதர்]]களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன.
 
1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது. <ref>Fulbrook 1991, pp. 188–189.</ref> 1938இல் [[ஆசுதிரியா]] கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் [[செக்கோசிலோவாக்கியா]]வைக் கைப்பற்றியது. பின்னர் [[போலந்து படையெடுப்பு]] நடத்துமுகமாக [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் [[போலந்து படையெடுப்பு]] நடைபெற்றது; சோவியத் [[செஞ்சேனை]]யுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[பிரான்சு]]ம் செருமனி மீது போர் தொடுத்து [[இரண்டாம் உலகப் போர்]] தொடங்கியது.<ref name="Fulbrook 190">Fulbrook 1991, pp. 190–195.</ref> சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் [[பிரிட்டன் சண்டை]] என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி [[பர்பரோசா நடவடிக்கை|சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர்]]. அச்சமயத்தில் செருமனியும் மற்ற [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளும்]] ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் [[சுடாலின்கிராட் சண்டை]]யை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.<ref name="Fulbrook 190"/>
 
செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன்]] போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் [[நார்மாண்டி படையிறக்கம்|டி-டே]] படையிறக்கம் போரின் [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்கு முனையை]] திறந்தது; [[பல்ஜ் சண்டை|செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே]] நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. [[பெர்லின் சண்டை]]யையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது. <ref>{{cite book |last=Steinberg |first=Heinz Günter |title=Die Bevölkerungsentwicklung in Deutschland im Zweiten Weltkrieg: mit einem Überblick über die Entwicklung von 1945 bis 1990 |year=1991 |publisher=Kulturstiftung der dt. Vertriebenen |isbn=978-3-88557-089-9 |language=German}}</ref> மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;<ref>{{cite news | url = http://news.bbc.co.uk/2/hi/europe/4530565.stm | title = Leaders mourn Soviet wartime dead | work = BBC News | date=9 May 2005 |accessdate=18 March 2011 }}</ref> செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.<ref name="Rüdiger Overmans 2000">Rüdiger Overmans. ''Deutsche militärische Verluste im Zweiten Weltkrieg''. Oldenbourg 2000. ISBN 3-486-56531-1</ref> 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.<ref>Das Deutsche Reich und der Zweite Weltkrieg, Bd. 9/1, ISBN 3-421-06236-6. Page 460 (This study was prepared by the [[German Armed Forces Military History Research Office]], an agency of the German government)</ref><ref>Bonn : Kulturstiftung der Deutschen Vertriebenen, ''Vertreibung und Vertreibungsverbrechen, 1945–1948 : Bericht des Bundesarchivs vom 28. Mai 1974 : Archivalien und ausgewählte Erlebnisberichte'' / [Redaktion, Silke Spieler]. Bonn :1989 ISBN 3-88557-067-X. (This is a study of German expulsion casualties due to "war crimes" prepared by the German government Archives)</ref>
 
சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக [[பெரும் இன அழிப்பு]] என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் [[யூதர்]]கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 [[டி 4 செயல்|மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள்]], ஆயிரக்கணக்கான [[யெகோவாவின் சாட்சிகள்]], ஆயிரக்கணக்கான [[தற்பால்சேர்க்கை]]யினர், நூறாயிரக்கணக்கான [[பெரும் இன அழிப்பு#இடதுசாரிகள்|அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்]] உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர்.<ref>{{cite book |last=Niewyk |first=Donald L. |title=The Columbia Guide to the Holocaust |year=2000 |publisher=Columbia University Press |pages=45–52 |author2=Nicosia, Francis R. |isbn =978-0-231-11200-0}}</ref> தவிர ஆறு மில்லியன் [[உக்ரைனியர்]] மற்றும் [[போலந்து|போலந்துக்காரர்களும்]] 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர்.
வரிசை 148:
 
[[File:Thefalloftheberlinwall1989.JPG|thumb|right|1989இல் இடிபடுவதற்கு முன்னதாக [[பிரான்டென்போர்க் வாயில்]] அருகே [[பெர்லின் சுவர்]]. இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.]]
மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) [[கொன்ராடு அடேனார்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு]]டன் இணைந்தது.
 
கிழக்கு செருமனி [[கிழக்கத்திய திரளணி]] நாடாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.<ref name="spiegel_20080311">{{cite web|url = http://www.spiegel.de/international/germany/0,1518,540771,00.html|title = New Study Finds More Stasi Spooks|author = maw/dpa|date = 11 March 2008|work = Spiegel Online&nbsp;– english site (www.spiegel.de/international)|publisher = [[Der Spiegel]]|accessdate =30 October 2011|quote = 189,000 people were informers for the Stasi&nbsp;– the former Communist secret police&nbsp;– when East Germany collapsed in 1989&nbsp;– 15,000 more than previous studies had suggested. [...] about one in 20 members of the former East German Communist party, the SED, was a secret police informant.}}</ref> சோவியத்-பாணி [[திட்டமிட்ட பொருளாதாரம்]] அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.<ref>{{cite news | last = Colchester | first = Nico | url = http://www.ft.com/cms/s/2/504285c4-68b6-11da-bd30-0000779e2340,dwp_uuid=6f876a3c-e19f-11da-bf4c-0000779e2340.html | title = D-mark day dawns | newspaper = [[Financial Times]] | location = London | date = 1 January 2001 | accessdate =19 March 2011 }}</ref>
 
1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு [[பெர்லின் சுவர்]] கட்டப்பட்டது. இது [[பனிப்போர்|பனிப்போரின்]] ஓர் அடையாளமாக விளங்கியது.<ref name="state"/> எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, [[செருமானிய மீளிணைவு]] மற்றும் ''டை வென்டே'' (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் [[செருமானிய மீளிணைவு]] ஏற்பட இது வழிவகுத்தது. <ref name="state"/>
 
===செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் ===
வரிசை 236:
[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html Field listing&nbsp;– GDP (PPP exchange rate)]</ref> 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.<ref>{{cite web|author=Financial Crisis |url=http://www.telegraph.co.uk/finance/financialcrisis/9643193/EU-budget-who-pays-what-and-how-it-is-spent.html |title=EU budget: who pays what and how it is spent |publisher=Telegraph |accessdate=4 November 2012}}</ref> மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.<ref name="CIA"/> தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://de.statista.com/statistik/daten/studie/1239/umfrage/aktuelle-arbeitslosenquote-in-deutschland-monatsdurchschnittswerte/|title=Arbeitslosenquote in Deutschland von Mai 2013 bis April 2014}}</ref> இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.<ref>{{cite web|author=Press office of the Deutsche Bundesbank |url=http://www.bundesbank.de/statistik/statistik_konjunktur.en.php |title=Deutsche Bundesbank&nbsp;— Statistics |publisher=Bundesbank.de |accessdate=4 June 2012}}</ref>
 
ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், [[ஐரோ]], செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=euroc>{{Cite news |title =Germans Say Goodbye to the Mark, a Symbol of Strength and Unity |newspaper=The New York Times |accessdate =18 March 2011 |url = http://www.nytimes.com/2002/01/01/world/germans-say-goodbye-to-the-mark-a-symbol-of-strength-and-unity.html |first=Edmund L. |last =Andrews |date=1 January 2002}}</ref><ref>{{cite news |title=On Jan.&nbsp;1, out of many arises one Euro |newspaper=[[St. Petersburg Times]] |first= Susan |last =Taylor Martin |date=28 December 1998 |page=National, 1.A }}</ref> செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை [[ஐரோப்பிய நடுவண் வங்கி]] தீர்மானிக்கின்றது. [[செருமானிய மீளிணைவு|செருமானிய மீளிணைவின்]] இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது.<ref>{{cite news |author=Berg, S.; Winter, S.; Wassermann, A. |date=5 September 2005 |url=http://www.spiegel.de/international/spiegel/0,1518,373639,00.html |title=The Price of a Failed Reunification |newspaper=Spiegel Online |accessdate=28 November 2006}}</ref> கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80&nbsp;பில்லியன் பரிமாறப்படுகின்றது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2009/06/19/world/europe/19germany.html |work=The New York Times |title=In East Germany, a Decline as Stark as a Wall | first=Nicholas |last=Kulish |date=19 June 2009 |accessdate=27 March 2011}}</ref> சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50&nbsp;பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது. <ref>{{Cite news| url= http://www.france24.com/en/20090106-germany-agrees-new-50-billion-euro-stimulus-plan| title= Germany agrees on 50-billion-euro stimulus plan| work =France 24| date=6 January 2009| accessdate=27 March 2011}}</ref>
 
உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன.<ref>{{cite web | url=http://www.germany.travel/en/business-travel/trade-fairs/trade-fairs/messen.html | title=Trade fairs in Germany | publisher=[[German National Tourist Board]] | accessdate=5 February 2014}}</ref>
வரிசை 288:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|af}}
{{Link FA|en}}
{{Link FA|gl}}
{{Link FA|gv}}
{{Link FA|hr}}
{{Link FA|mk}}
{{Link FA|mr}}
{{Link FA|nah}}
{{Link FA|pt}}
{{Link FA|vi}}
{{Link FA|yi}}
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது