"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|af}} → (3)
சி (clean up, replaced: {{Link FA|af}} → (3))
முதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் [[கிமு]] [[கிமு 1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. [[கிபி]] [[3ம் நூற்றாண்டு|மூன்றாம் நூற்றாண்டு]] முதல் [[5ம் நூற்றாண்டு|ஐந்தாம் நூற்றாண்டு]] வரை, இந்திய அரசுகளான [[புன்னன்]], [[சென்லா]] அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் [[கிமர் பேரரசு|கிமர் பேரரசை]] நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.<ref name="CS">Country-Studies.com. [http://www.country-studies.com/cambodia/early-indianized-kingdom-of-funan.html ''Country Studies Handbook'';] information taken from US Dept of the Army. Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகள் [[சீனா]]வுடனும், [[தாய்லாந்து]]டனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.<ref name="BRIT">Britannica.com. [http://www.britannica.com/eb/article-52477 History of Cambodia.] Accessed [[July 25]] [[2006]].</ref>. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய [[கிமர் பேரரசு]] , [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] முதல் [[15ம் நூற்றாண்டு]] வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.
 
கிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான [[அங்கூர்]] நகரம் உருவானது. அங்கூர் நகரின், [[அங்கூர் வாட்]] கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
கிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போது, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், [[அங்கூர்]] நகரம் [[தாய் இன மக்கள்|தாய் இன]] மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி [[1432]]ல் கைவிடப்பட்டது.<ref name="Chan">[[David P. Chandler|Chandler, David P.]] "The Land and the People of Cambodia". 1991. HarperCollins. New York, NY. p 77</ref>. [[அங்கூர்]] நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை [[லோவக்]] நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.
 
கம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வெளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன<ref>Royal Government of Cambodia.[http://www.cambodia.gov.kh/unisql1/egov/english/country.foreign_embassy.html வெளிநாட்டு தூதரகங்கள்].</ref>. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை.
2003ம் ஆண்டு, கம்போடியாவின் [[அங்கூர் வாட்]] கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் [[புனோம் பென்]] நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், [[புனோம் பென்]] நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் [[அமெரிக்க டாலர்|டாலர்]] தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு [[மார்ச் 21]]ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் தத்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.
 
== கம்போடியாவின் இயற்கை வளம் ==
 
[[படிமம்:Angkor wat temple.jpg|thumbnail|[[அங்கூர் வாட்]] - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.]]
1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். [[1997]]ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.
 
[[கல்வியின்மை]]யும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும் அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.<ref name="CIACB">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html சிஐஏ வின் தகவல் களஞ்சியம்]</ref>
[[படிமம்:Cham Muslims Cambodian.JPG|thumbnail|right|250px|கம்போடிய [[சாம் இன]] இசுலாமியர்]]
90 விழுக்காடு மக்கள் [[கெமர் மக்கள்|கிமர் இனத்தை]]ச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி [[கிமர் மொழி]], அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர [[சீனர்]], [[வியட்நாம் மக்கள்|வியட்நாமியர்]], [[சாம் மக்கள்|சாம் இனத்தவர்]], இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர்.
[[பிரெஞ்சு]] மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், [[ஆங்கிலம்|ஆங்கிலத்தைப்]] பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.
 
==சான்றுகள் ==
[[பகுப்பு:கம்போடியா]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|af}}
{{Link FA|en}}
{{Link FA|km}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1827062" இருந்து மீள்விக்கப்பட்டது