மெக்சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (3)
வரிசை 56:
கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[தோல்ட்டெக் நாகரிகம்|தோல்ட்டெக்]], [[தியோத்திகுவாக்கான் நாகரிகம்|தியோத்திகுவாக்கான்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[மாயா நாகரிகம்|மாயா]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான [[தெனோச்தித்லான்|மெக்சிக்கோ-தெனோச்தித்லானில்]] இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் [[புதிய எசுப்பெயின்|புதிய எசுப்பெயினின்]] வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]], அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த [[என்ரிக் பீனா நீட்டோ]] பதவி ஏற்றுள்ளார்.<ref>http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=78480</ref>
 
மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு [[பிரதேச வல்லரசு]]ம், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், [[பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு|பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின்]] முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக [[உலக வங்கி]]யால் கணிக்கப்படுகிறது. இது [[புதுத் தொழில்மய நாடு|புதுத் தொழில்மய நாடாக]] இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய [[வாங்கும் திறன் சமநிலை]]யையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் [[வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தம்|வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக்]] கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த [[யுனெசுக்கோ]] [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களின்]] எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர்.
 
2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, [[மெக்சிக்கப் போதைப்பொருள் போர்|போதைப்பொருள் போரின்]] நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர்.
 
== சொற்பிறப்பு ==
புதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் [[நௌவாத்தில் மொழி]]யில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை.
 
"மெஹிகோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது.
வரிசை 70:
[[படிமம்:Mexico topographic map-blank.svg|thumb|மெக்சிக்கோவின் நில உருவப் படம்]]
[[படிமம்:North America from low orbiting satellite Suomi NPP.jpg|thumb|right|விண்வெளியில் இருந்து மெக்சிக்கோவின் தோற்றம். நாசாவின் சுவோமி NPP என்னும் செய்மதியில் இருந்து சனவரி 2012ல் எடுக்கப்பட்டது.]]
மெக்சிக்கோ, அகலக்கோடுகள் [[14வது அகலக்கோடு வடக்கு|14°]] and [[33வது அகலக்கோடு வடக்கு|33°வ]], நெடுங்கோடுகள் [[86வது நெடுங்கோடு மேற்கு|86°]], [[119வது நெடுங்கோடு மேற்கு|119°மே]] என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் [[வட அமெரிக்கக் கண்டத்தட்டு|வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது]] உள்ளது. [[பாகா கலிபோர்னியா தீவக்குறை]]யின் சில பகுதிகள் மட்டும் [[பசிபிக் கண்டத்தட்டு|பசிபிக் கண்டத்தட்டிலும்]], [[கொக்கோசு கண்டத்தட்டு|கொக்கோசு கண்டத்தட்டிலும்]] உள்ளன. [[புவியியற்பியல்|புவியியற்பியலின்படி]], சில புவியியலாளர்கள், [[தெகுவாந்த்தப்பெக் குறுநிலம்|தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக்]] கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர்.<ref>Nord-Amèrica, in [http://www.grec.cat/ Gran Enciclopèdia Catalana]</ref> [[புவியரசியல்|புவியரசியலின்படி]] மெக்சிக்கோ முழுவதும், [[கனடா]], ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.<ref>{{cite book |last= Parsons |first= Alan |coauthors= Jonathan Schaffer |title= Geopolitics of oil and natural gas |publisher= U.S. Department of State |series= Economic Perspectives |year= 2004 |month= May |isbn= }}</ref>
 
1,972,550 [[சதுர கிலோமீட்டர்]] (761,606 [[சதுர மைல்]]) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், [[மெக்சிக்கக் குடா]], கரிபியன், [[கலிபோர்னியக் குடா]] ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும்.
வரிசை 96:
[[பகுப்பு:வட அமெரிக்க நாடுகள்]]
 
{{Link FA|ar}}
{{Link FA|ca}}
{{Link FA|es}}
{{Link FA|nah}}
"https://ta.wikipedia.org/wiki/மெக்சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது