ரானல்ட் ரேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|en}} → (3)
வரிசை 32:
==இளமைப் பருவம்==
இவர் இலினாய்சின் டம்பிக்கோ நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஜாக் ரேகன், நெல்லே ரேகன் ஆவர். இவரது தந்தை விற்பனையாளராகப் பணியாற்றியவர். இளவயதில், இலினாய்சின் பல நகரங்களிலும், பேரூராட்சிகளிலும் வாழ்ந்தார். இவர் இனவேறுபாட்டை வெறுத்தார்.
டிக்சன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கே கதைகூறுதல், நடித்தல், விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆறு ஆண்டு காலம் உயிர்காப்பாளாராக இருந்தார். <ref name="cnn bio">"[http://www.cnn.com/SPECIALS/2004/reagan/stories/bio.part.one/index.html Ronald Reagan (1911–2004): Small town to tinseltown]". CNN, 2004. Retrieved August 15, 2007.</ref> யுரேகா கல்லூரியில் படித்தார். பொருளாதாரம், சமூகவியலில் மேற்படிப்பை படித்தார். கல்லூரியின் கால்பந்தாட்ட குழுவில் இணைந்தார். கல்லூரி அரசியலில், விளையாட்டில் , நாடகத்தில் என பல்வேறு துறைகளில் பங்கு கொண்டார்.
 
==தொழில்==
வரிசை 39:
வானொலிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
 
கலிபோர்னியாவுக்குச் சென்று, வார்னர் புரோஸ் நிறுவனத்தில் ஏழாண்டுகள் வேலைக்குச் சேர்ந்தார். <ref>{{cite web|url=http://www.reaganfoundation.org/reagan/biography/a_hero.asp|title=Biography > A Hero from the Heartland|accessdate=December 30, 2007|publisher=Ronald Reagan Presidential Foundation|archiveurl=http://web.archive.org/web/20071031092212/http://www.reaganfoundation.org/reagan/biography/a_hero.asp|archivedate=October 31, 2007|deadurl=yes}}</ref> இவரது நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
1939 ஆண்டிஏகுள் 19 திரைப்படங்களில் நடித்திருந்தார். இவற்றில் டார்க் விக்டரி குறிப்பிடத்தக்க திரைப்படம்.. சாண்டா ஃபே டிரையல் என்ற திரைப்படத்தில் கிப்பர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த பெயராலேயே நீண்ட காலம் அழைக்கப்பட்டார். 1941இல் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கத் திரைப்படத்துறையில் முன்னணி நாயகர்களுள் ஒருவர் எனத் தெரிய வந்தது. கிங்ஸ் ரோ என்ற வெற்றித் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அமெரிக்க இராணுவத்திற்கு அழைக்கப்பட்டார். எனவே, திரைத்துறையில் நட்சத்திர நாயகனாக வாய்ப்பிருக்கவில்லை,
தி வாய்ஸ் ஆஃப் தி டர்ட்டில், ஜான் லவ்ஸ் மேரி, தி ஹாஸ்டி ஹார்ட், பெட்டைம் ஃபார் போன்சோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார்.
 
===இராணுவம்===
பதினான்கு இராணுவப் படிப்புகளை படித்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். <ref>{{cite web|url=http://www.globalsecurity.org/military/agency/army/usar-history.htm|title=U.S. Army Reserve – History|accessdate=December 30, 2007|publisher=Global Security.com}}</ref> செகண்ட் லியூடனண்ட் என்ற பதவியை அடைந்தார். இவரது கிட்டப் பார்வையினால், குறைந்தகால சேவையை மேற்கொள்ளவே அனுமதிக்கப்பட்டார். பின்னர், சான் பிரான்சிஸ்கோவில் போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணியாற்றினார். சிறிதுகாலத்திற்குப் பின்னர், முதல்நிலை லியூடனண்ட் ஆக உயர்ந்தார்.
மேஜர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். போர் முடியும் வரையில் அமெரிக்காவிலேயே இருந்தார்.
 
==குடும்பம்==
ஜேன் வைமன் என்ற நடிகையுடன் இணைந்து பிரதர் ரேட் என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். <ref>{{cite news|url=http://www.nytimes.com/1984/05/08/us/dispute-over-theater-splits-chicago-city-council.html|title=Dispute Over Theatre Splits Chicago City Council|accessdate=May 17, 2007|date=May 8, 1984|work=[[த நியூயார்க் டைம்ஸ்]]}}</ref> இவரின் அரசியல் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் மனைவி மணமுறிவு கோரினார். மணமுறிவு பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் இவரே.
நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். குறுகிய கால பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இவருக்கு அல்சீமர் நோய் தாக்கியபோது, இவர் மனைவி இவரிடம் இருந்த அன்பை வெளிக்காட்டினார்.
வரிசை 66:
==சிறப்புகளும் விருதுகளும்==
இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் என்ற அமைப்பில் வாழ்நாள் சிறப்பு உறுப்பினராக ஏற்கபட்டார். அமெரிக்க அரசின் இராணுவத்தினால் வழங்கப்படும் தாயர் விருது பெற்றுள்ளார்.
பிரெசிடென்சியல் மெடல் ஆஃப் பிரீடம் எனப்படும் விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். வாசிங்டன் விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை கப்பலுக்கும், வான்படை விமானத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. <ref>{{cite web|url=http://www.itcdc.com|title=Ronald Reagan Building and International Trade Center|publisher=U.S. General Services Administration|accessdate=March 22, 2007}}</ref>
இவரது வெண்கல உருவச் சிலை தேசிய சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் இறந்த பின்னர், இவரை போற்றும் வகையில் அரசு அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் நூறு முக்கிய நபர்கள் என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
வரிசை 74:
==சான்றுகள்==
{{reflist}}
 
 
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
வரி 82 ⟶ 81:
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
 
{{Link FA|en}}
{{Link FA|sv}}
{{Link FA|zh}}
"https://ta.wikipedia.org/wiki/ரானல்ட்_ரேகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது