கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி clean up, replaced: {{Link FA|mk}} →
வரிசை 43:
* மூட்டுள்ள தூக்கங்கள் (மூட்டுள்ள கால்கள்)
 
இவை பார்வைக்காக கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திசையை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலகக் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் [[பக்டீரியா]]க்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும்.
 
கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கிய பங்கை வகிக்கும் [[இறால்]], [[நண்டு]] என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் [[வண்ணத்துப் பூச்சி]]களும், [[தேனி]]க்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
வரிசை 49:
==இனப்பல்வகைமை==
 
ஒரு கணிப்பின் படி இதுவரை அறியப்பட்ட கணுக்காலி இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,170,000 ஆகும். எனினும் புவியில் வாழும் கணுக்காலி இனங்களின் உண்மையான எண்ணிக்கை 5-10 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஒரு பிரதேசத்தின் சராசரி இனப்பல்வகைமையைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனினும் துருவப் பிரதேசங்களை விட அயனமண்டலப் பிரதேசங்களின் கணுக்காலி இனங்களின் பல்வகைமை மிக அதிகமாகும். 1992ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி கோஸ்டா ரிகா எனும் சிறிய அயன மண்டல நாட்டில் மாத்திரம் 365000 கணுக்காலி இனங்கள் உள்ளன. எனினும் துருவங்களுக்கருகிலுள்ள மிகப்பெரிய நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை இதை விடக் குறைவாகவும் காணப்படலாம்.
 
==உடலமைப்பு==
வரிசை 70:
# '''[[பலகாலி|மைரியபோடா]]''': மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் (வகுப்பு டிப்லோபோடா) துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் (வகுப்பு கைலோபோடா) துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும். அனைத்திலும் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். இவற்றில் ஒரு சோடி உணர்கொம்புகளும், இரு சோடி எளிய கண்களும் புலனங்கங்களாக உள்ளன. வாதனாளித் தொகுதி மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும்.
# '''கிரஸ்டேசியன்கள்''': பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம். இவற்றில் புலனங்கங்களாக இரு சோடி உணர்கொம்புகளும், காம்புடைய ஒருசோடி கூட்டுக்கண்களும் உள்ளன. இவற்றில் இரண்டாம் சோடி சிறிய உணர்கொம்பிற்குக் கீழுள்ள பசுஞ்சுரப்பியினால் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். அனேகமாக கழிவுப் பொருளாக அமோனியா காணப்படுகின்றது. பூக்கள் மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும். நண்டுகளின் புறவன்கூட்டில் கைட்டினுடன் வலுவூட்டுவதற்காக சுண்ணாம்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் நோபிளியஸ் எனும் குடம்பிப் பருவம் வாழ்க்கை வட்டத்தில் உருவாக்கப்படுகின்றது. இவற்றின் உடலானது தலைநெஞ்சு, வயிறு என இரு தக்குமாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
# '''[[ஆறுகாலி]]கள்''': [[பூச்சி]]களையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய உபகணம்.
 
<div style="float:left; font-size:85%; border:solid 1px silver; padding:2px; margin:2px;"><div style="border:solid 1px silver; padding:5px;">{{barlabel
வரிசை 116:
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:கணுக்காலிகள்]]
 
[[பகுப்பு:கணுக்காலிகள்]]
{{Link FA|mk}}
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது